twitter

    காப்பான் கதை

    காப்பான் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா சைகல், போமன் ஐரணி, சமுத்திரக்கனி மற்றும் பல திரையுலக முன்னணி நடிகர்கள் நடித்துள்ள அதிரடி மற்றும் கமெர்சியல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான் திரைப்படத்தினை தொடர்ந்து உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படமாகும். காப்பான் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ஆன்டனி எடிட்டிங் பணிசெய்துள்ளார்.



    காப்பான் திரைப்படத்தின் தகவல்கள்

    இத்திரைப்படம் 2019 ஆகஸ்ட் 30-ல் வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தினை 2019 செப்டம்பர் 20-ற்கு மாற்றி வைத்துள்ளனர் படக்குழுவினர். இதன் காரணத்தை படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்படவில்லை. மேலும் காப்பான் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் விளம்பர பணிகளை 2019 ஆகஸ்ட் 16 முதல் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் முதல் ப்ரோமோவாக சிறுக்கி பாடல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    காப்பான் திரைப்படத்தின் டீஸர் இப்படத்தின் பற்றிய அதிக தகவல்களை கொண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து காப்பான் திரைப்படத்தின் ப்ரோமோ விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரபரப்பு ஆகிவருகிறது. தற்போது 2019 செப் 4ல் வெளியான காப்பான் திரைப்பட ட்ரைலரில் இப்படத்தின் கதை, சூர்யாவின் சிறப்பான வசனங்கள் போன்ற எவ்வீத தகவல்கள் இல்லாததால் நடிகர் சூர்யா-வின் ரசிகர்கள் சிறிய ஏமாற்ற்றம் அடைந்துள்ளனர்.

    காப்பான் திரைப்படத்தின் கதை

    காப்பான் திரைப்படத்தின் நாயகன் கதிர் (சூர்யா) ஒரு இரகசிய பாதுகாப்பு துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், கதிர் (சூர்யா) ஒரு அண்டர்கவர் ஆப்ரேஷன் என இரகசியமாக மக்களுள் மக்களாக இருந்து கொண்டு தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்து வருகிறார். இவரை சில தீவிரவாதிகள் ஒரு சில பணயக்கைதிகளை கொண்டு கண்டறிகிறார்கள். அவர்களால் இவர் அதிகாரப்பூர்வமாக இரகசிய பாதுகாப்பு துறை ஆய்வாளராக பொறுப்பேற்கிறார்.

    நாட்டின் பிரதம மந்திரியாக இருக்கும் சந்திரகாந்த் வர்மா (மோகன்லால்) ஒரு நேர்மையான அரசியல்வாதி. இவரின் நேர்மையால் இவருக்கு பல தரப்புகளிலிருந்து பிரச்சனைகளும், மிரட்டல்களும் தொடர்ந்து வருகிறது. இதனை பொருட்படுத்தாமல் தனது பணியினை நேர்மையாக செய்யும் இவரை கொலைசெய்ய சில முயற்சிகள் நடக்கிறது. இதனால் இவருக்கு பாதுகாப்பாக கதிர் (சூர்யா) பணி நியமிக்கப்படுகிறார்.

    பிரதம மந்திரி மோகன்லால்-யை சில கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து வருகிறார் போமன் ஐரானி. மோகன்லால்-க்கு பாதுகாப்பு அதிகாரிகளாக சூர்யா மற்றும் அவரது குழு சமுத்திரக்கனி, பிரேம், கிரண் ஆகியோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். சூர்யாவின் குழுவில் உள்ள நபர்களின் குடும்பத்தை கடத்தி, சூர்யாவின் நண்பர்களை மிரட்டி மோகன்லால்-யை கொலை செய்கின்றனர் தீவிரவாதிகள்.

    மோகன்லால் இறந்ததால் அவர் இடத்திற்கு அவரது மகன் ஆர்யா பதவிக்கு வருகிறார். மோகன்லால்-ன் தனிப்பட்ட செயலாளரான சயீசா (சூர்யாவின் காதலி) சந்தேகிக்க படுகிறார். சயீசா துணை கொண்டு பின்னணியில் நடந்ததை கண்டறிகிறார் சூர்யா. மந்திரியை கொலை செய்தது யார்? நாட்டில் விவசாயத்தை அழிக்க நடத்தும் சூழ்ச்சிகள் என்ன? பின்னணியில் யார்? என்பதே இத்திரைப்படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie காப்பான் with us? Please send it to us ([email protected]).