குடும்பஸ்தன் என்பது ராஜேஷ்வர் காளிசாமி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படம் ஆகும், இதில் மணிகண்டன், சான்வே மேகனா, மற்றும் குரு சோமசுந்தரம் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கோயம்புத்தூரின் சூழலில் நடைபெறும் கதையில், புதிய திருமணமாகிய இளைஞன் திடீரென்று திருமணத்தின் பொறுப்புகளை சந்திக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு சுஜித் சுப்ரமணியத்தின் செயலில் கோயம்புத்தூரின் நகரத்தை புதுவிதமாக எடுத்துக் காட்டுகிறது. இசை வைசாக் இசையமைத்துள்ளார், இது படத்தின் உணர்ச்சிகரமான தொனியை வெளிப்படுத்தும். சினிமாகாரன் பேனர் மூலம் எஸ் வினோத்குமார் தயாரித்த இப்படம், நகைச்சுவை, உணர்வு மற்றும் நிஜ வாழ்க்கைச் சூழ்நிலைகளின் கலவையாக அமைகின்றது.
கதை
நவீன் கதாபாத்திரத்தில் மணிகண்டன் கிராபிக் டிசைனராக நடித்துள்ளார். அவரின் காதலித்து திருமணம் செய்த பெண் வெண்ணிலா (சான்வி மேகனா), ஆத்தி திராவிடர் பெண்ணாக இருக்கின்றாள். சாதி வேறுபாட்டை மீறி, சாதி விட்டு சாதி திருமணம் செய்த நிலையில், வெண்ணிலா, தனது ஐஏஎஸ் கனவுடன், திருமணமான ஜோரில் கர்ப்பமாக இருக்கிறார். குடும்பத்தை நடத்த பெரும் கடன் எடுத்து, வாழ்க்கையை தன்னுடன் பகிர்ந்து கொண்ட ஹீரோவுக்கு எதிரான பிரச்சனைகள் உருவாகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு அவர் என்ன தீர்வு கண்டார்? அவை சரியாக விட்டு வந்தனவா? என்பதே கதையின் மையமாக விளங்குகிறது.
வெளியீடு
இப்படம் ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.