குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா நடிக்கும் அதிரடி திரைப்படம்.
கதை :
கதையின் நாயகர்கள் பாரதி ராஜா மற்றும் அவரது பையன் விதார்த். நடுத்தர குடும்பம், கால் டாக்சி ஓட்டி குடும்பத்தை நடத்துகின்றனர். விதாரத்திற்கு பெண் பார்ப்பதற்காக செல்லும் இடத்தில், இவருக்கு பெண் குடுக்க முடியாது என்று சொல்லி விடுகின்றனர்.
அதே நேரத்தில், ஒரு நாள் ஐம்பொன் சிலையை கடத்தி, அதனை விற்க பாரதிராஜாவை அனுப்புகிறது கடத்தல் குழு. அந்த கடத்தல் குழு தந்த பையில் என்ன உள்ளது என்பதை தெரிந்தும் அதை எடுத்துக்கொண்டு செல்கிறார் பாரதிராஜா.
பாரதிராஜா எடுத்து செல்லும் பையில் உள்ள படம்தான் குரங்கு பொம்மை. அது தான் அந்த பையின் அடையாளம் கூட. அந்த பையை ஒருவன் திருடி, அந்த வழியில் வரும் விதார்த்திடம் மாட்டிக்கொள்கிறான்.
ஒரு புறம், அந்த குரங்குபொம்மை பையை உரியவரிடம் குடுக்க பையின் உரிமையாளரை தேட, மறுபுறம் தந்தையை காணவில்லை என்று தாயிடம் தகவல் வருகின்றது. பின்னர், விதார்த் கையில் இருக்கும் பை, பையில் இருக்கும் சிலை, காணாமல் போன தந்தைக்கு என்ன ஆனது என்பதே இப்படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.