லால் சிங் சத்தா - இயக்குனர் அட்வைட் சந்தன் இயக்கத்தில் அமீர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா என பலர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை நடிகர் அமீர் கான் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரிதம் மற்றும் தனுஜ் திக்கு இணைந்து இசையமைத்துள்ளனர்.
லால் சிங் சத்தா திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' தயாரிப்பு நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
லால் சிங் சத்தா திரைப்படத்தின் கதை
தி ஃபாரஸ்ட் கம்ப் படம் பார்த்தவர்களுக்கு ஏற்கனவே கதை தெரிந்திருக்கும்.
ஸ்பெஷல் சைல்டாகவும் ஐக்யூ லெவல் குறைவாகவும் உள்ள லால் சிங் சத்தா சரியாக நடக்கக் கூட முடியாமல் அவதிப்படும் நிலையில், அவனது சிறு வயது தோழி ரூபா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க ஓடு லால் சிங் ஓடு என ஊக்கம் கொடுக்க, அவனது வாழ்க்கையின் ஓட்டம் தொடங்குகிறது.
விளையாட்டில் சாதனை, அப்படியே கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்திய ராணுவத்தில் சேர்வது, காதலியை தேடிச் செல்வது, காதலி பிரிந்து செல்ல பல ஆண்டுகள் ஓடுவது இறுதியில் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? காதலிக்கு என்ன ஆனது என்பது தான் லால் சிங் சத்தா படத்தின் கதை.