மங்காத்தா கதை

  மங்காத்தா 2011 ஆகஸ்ட் 31 ல் வெளியான ஒரு தமிழ் அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். இப்படம் அஜீத் குமாரின் 50 ஆவது படம் ஆகும். தயாநிதி அழகிரியின் கிளௌட் நயன் மூவீஸ் கலையகம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. மங்காத்தா படம் தமிழில் வெளிவந்ததை அடுத்து, விரைவில் கேம்ப்ளர் என்ற பெயரில் தெலுங்கில் வர இருக்கிறது. மலையாளத்திலும் இப்படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். இப்படம் 2007-ல் வெளியான பில்லா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

  கதை:

  அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார்.

  ஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். 

  ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது...திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா. என்பது தான் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie மங்காத்தா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).