மார்க் ஆண்டனி - இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா என பல தமிழ் திரைப்பட முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் அறிவியல் புனைவு - அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் வினோத் குமார் தனது மினி ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களின் குடும்பங்களோடு இணைந்து கண்டு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு அறிவியல் புனைவு திரைக்கதையை ஆக்ஷன் - திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்துள்ளார்.
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் கதை
1975ஆம் ஆண்டு சிரஞ்சீவி என்னும் விஞ்ஞானி (செல்வராகவன்) டைம் ட்ராவல் தொலைபேசியை கண்டுபிடிக்கிறார். இதனை கொண்டாட ஒரு பாரில் மது அருந்த செல்கிறார்.
சென்னையில் ஜாக்கி மற்றும் ஆண்டனி என இரு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் ஒரு கேங்ஸ்டர் ஆவார். இவர்களுக்கு ஏகாபரம் (சுனில்) ஒரு எதிரி உள்ளார். ஏகாபரத்தின் தம்பியை கொலை செய்துவிட்டு அந்த கேங்ஸ்டரான ஜாக்கி மற்றும் ஆண்டனி-யை பழிதீர்க்க அவர் காத்திருக்கிறார்.
ஒரு நாள் சென்னையில் ஒரு பாரில் மது அருந்த வந்த ஆண்டனி-யை ஏகாபரம் கொலை செய்கிறார். அதே பாரில் மது அருந்த வந்த அந்த விஞ்ஞானியும் சண்டையில் சிக்கி உயிரிழக்கிறார்.
1995ல் வாழும் ஜாக்கி மற்றும் ஆண்டனியின் மகன்களுக்கு இந்த டைம் மிசன் கிடைக்க, இந்த டைம் ட்ராவல் தொலைபேசியை கொண்டு இவர்கள் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.