X
மேதகு
Action | 25 Jun 2021 | 100 Mins
Tamil

மேதகு கதை

மேதகு இயக்குனர் டி. கிட்டு இயக்கத்தில், 'தமிழீழத் திரைக்களம்' தயாரிப்பு நிறுவனம் வழங்கும் விடுதலை புலி தலைவைரான 'பிரபாகரன்'-னின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். இப்படத்தின் தயாரிப்பாளரான ரியாஸ் ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்ற, எடிட்டர் சி.எம். இளங்கோவன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரவீன் குமார் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் 'பிளாக் ஷீப்' ஆன்லைன் ஓடிடி தளத்தில் 2021 ஜூன் 25ல் வெளியானது. மேதகு திரைப்படம் 'கிரவுடு ஃபண்டிங்' (Crowdfunding) முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேதகு கதை

மேதகு - விடுதலை புலிகள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமாகும். இப்படத்தின் கதை பெரும்பாலும் பிரபாகரனின் வாழ்க்கை சுற்றி நடக்கிறது. 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அரசியல் சூழ்நிலை, யாழ்ப்பாணத்தில் நடந்த உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த சிங்கள தாக்குதல் என இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடந்த பல நிகழ்வுகளை இப்படம் கூறியுள்ளது.

தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் கலவரத்தின் பின்னணியில் இருக்கும் மேயர் துறையப்பாவை கொலை செய்து, பிரபாகரன் விடுதலை புலி தலைவராக மாறுவதே இப்படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+