மூக்குத்தி அம்மன் கதை

  மூக்குத்தி அம்மன் நகைச்சுவையாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி நாயகனாக நடித்து தற்போது இயக்குனராக அறிமுகமாகும் அறிமுக இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் க்ரிஷ் இசையமைத்துள்ளார்.

  2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருந்த இத்திரைப்படம், தியேட்டர் பணிநிறுத்தம் மற்றும் சில காரணங்களால் இப்படம் ஆன்லைன் ஓடிடி தளத்திற்கு சென்றது. இப்படம் 2020-ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆன்லைன் ஓடிடி-யில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது.
  மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் கதை

  குடும்பத்தை தனியாக தவிக்கவிட்டு ஓடி போன தந்தை, வயதிற்கு வந்த மூன்று தங்கைகள், வயதான முதியவர் மற்றும் பொறுப்பில்லாத தாய் என ஒரு குடும்பத்தை தனி ஆளாக காப்பாற்றுகிறார் ஆர்.ஜே.பாலாஜி. திருமண வயது ஆகியும் எந்த பெண்ணும் இவரை திருமணம் செய்ய முன்வராததால் தனியாக உள்ளார்.

  ஒரு தனியார் லோக்கல் சேனல் ஒன்றில் ரிப்போர்ட்டராக பணியாற்றும் இவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரித்து ஆஷ்ரம் கட்ட சில ஏற்பாடுகள் நடக்கிறது. அதனை பற்றி பல செய்திகள் வெளியிடுகிறார், ஆனால் மக்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.

  குடும்பத்தோடு திருப்பதி செல்ல ஊர்வசி புறப்படுகிறார், ஆனால் நகைச்சுவையாக பல தடங்கல் வருகிறது. பின் தனது குலதெய்வம் மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு சென்று ஒரு நாள் தங்க முயற்சி செய்கிறார். அங்கு ஆர்.ஜே.பாலாஜி அம்மன் இடம் தனது கஷ்டங்களை கூறுகிறார்.

  மூக்குத்தி அம்மன் ஆகா நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி கண் முன் தோன்றி ஆர்.ஜே.பாலாஜிக்கு வரம் தருகிறார்.

  பின் நாகர்கோவில் விவசாய இடத்தினை கைப்பற்றும் போலி சாமியார்களுக்கும் அம்மனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மூக்குத்தி அம்மன் திரைப்படம்.

  மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

  மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது சில வருடங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் பக்தி படமாகும்.

  ஆர்.ஜே பாலாஜி மற்றும் அவரது நண்பரான சரவணன் இணைந்து இயக்கும் இப்படம், நகைச்சுவை கதைக்களத்தில் சில மூட நம்பிக்கை அடிப்படையில் உருவாகியுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் 2020-ஆம் ஆண்டில் தியேட்டர்கள் மூடப்பட்டு பணிநிறுத்தம் காரணத்தால் இப்படம் இணையதள ஓடிடி செயலியில் வெளியாகியள்ளது.

  மூக்குத்தி அம்மன் ஓடிடி ரிலீஸ்

  மூக்குத்தி அம்மன் திரைப்படம் சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் இப்படம் இணையதள ஓடிடி மூலம் வெளியாகியள்ளது. முதலில் சன் நெக்ஸ்ட் செயலியில் வெளியிட இப்படத்தின் படக்குழுவை அணுகியது சன் நெட்ஒர்க் மற்றும் சன் தொலைக்காட்சி நிறுவனம்.

  சன் தொலைக்காட்சியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்னர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் செயற்கைக்கோள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் விஜய் நிறுவனம் பெற்றுள்ளது.

  நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம், 2020 தீபாவளி பண்டிகையின் சிறப்பு திரைப்படமாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இப்படம் வெளியாகியுள்ளது.

  மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் லாபம்

  மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மொத்தம் 12 கோடி அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகி நயன்தாராவின் 6 கோடி (ஜி.எஸ்.டி உள்பட) மற்றும் படத்தின் பணியாற்றியுள்ள மொத்த படக்குழுவின் சம்பளம், படப்பிடிப்பிற்கான செலவு, இப்படத்தின் ப்ரோமோஷன் செலவுகள் என மொத்தம் 12 கோடிகள் செலவாகியுள்ளது.

  மூக்குத்தி அம்மன் படக்குழு இப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை முதலில் 1.5 கோடிக்கு விற்றுள்ளது. பின்னர் இப்படத்தின் செயற்கைக்கோள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமை, பிறமொழி டப்பிங் உரிமை (ஹிந்தி டப்பிங் உரிமையை தவிர) என இப்படத்தினை மொத்தமாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் சார்பில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் 18 கோடிகளுக்கு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தினை வாங்கியுள்ளது.

  12 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் 18 கோடிகள் (டிஸ்னி+ ஹாட்ஸ்டார்) மற்றும் 1.5 கோடிகள் (ஹிந்தி டப்பிங் உரிமை) என விற்று மொத்தம் 7.5 கோடிகள் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் பெற்று தந்துள்ளது.

  **Note:Hey! Would you like to share the story of the movie மூக்குத்தி அம்மன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).