twitter
    Tamil»Movies»NGK»Story

    என்.ஜி.கே கதை

    NGK (என்.ஜி.கே - நந்தகோபால குமரன்) இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பரீத் சிங் நடிக்கும் அதிரடி மற்றும் அரசியல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தனது ட்ரீம் வாரியர் பிக்சார்ஸ் சார்பில் இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் எடிட்டிங் செய்துள்ளார்.

    கதை
    நந்த கோபால குமரன் - என்.ஜி.கே(சூர்யா) விவசாய நடுத்தெரு குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு விவசாயம் மற்றும் நாடு என இரு விஷயங்களில் அதீத ஆர்வம் உண்டு. விவசாயத்தை சார்ந்த படிப்பினை படித்து நல்ல வேலைகள்  கிடைத்தும் அதனை நீராகரித்து இயற்கை விவசாயத்தின் மேல் ஆர்வம் கொண்டு சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து தன் மனைவியான மைதிலி (சாய் பல்லவி) மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகிறார்.

    இவரின் விவசாயத்தின் மேல் பொறாமை கொண்டு பலர் அதனை எதிர்க்கின்றனர். இவரை அந்த தொகுதி எம்.எல்.ஏ-விடம் ஆதரவு பெறும்படி பலர் வலியுறுத்திகின்றனர். இவரும் அந்த தொகுதி எம்.எல்.ஏ (பொன்வண்ணன்)-னை சந்திக்கிறார். அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் பொன்வண்ணனின் கட்சியில் சேர்கின்றார்.

    இதனை தொடர்ந்து கட்சியில் தொண்டராக பணியாற்றிவரும் இவர், அந்த காட்சியில் மெல்ல முன்னேறி வருகிறார். அதிலிலும் பலர் பொறாமை படுகின்றனர். இறுதியில் அந்த கட்சியினை ஆதரித்தாரா? அரசியலில் இவர் சாதித்தாரா? ரகுல் ப்ரீத் சிங் யார், இவரின் உதவியை சூர்யா ஏன் நாடுகிறார்? என்பதே படத்தின் கதை.

    மீண்டும் படப்பிடிப்பு
    அரசியல் சாயலில் உருவாகியிருக்கும் இப்படமானது 2019 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவிருந்த நிலையில், தமிழில் பல அரசியல் மற்றும் அரசியலை விமர்சிக்கும் படங்கள் வரிசைகட்டி வெளியாகின. அந்த சமயத்தில் வெளியான ஒரு அரசியல் கதை கொண்டு ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. அத்திரைப்படத்தின் உள்ள ஒரு சில காட்சிகள் என்.ஜி.கே படத்திலும் இடம்பெற்றுள்ளது.

    ஆகையினால் இத்திரைப்படத்தின் ஒருசில காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் புதிதாக ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்டது. பின்னர் இத்திரைப்படம் 2019 மே 31ல் வெளியாகியுள்ளது.

    விளம்பரம்
    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிவுள்ள நிலையில், கேரளாவில் கொச்சின், ஆந்திராவின் ஐராபாத் மற்றும் தமிழகத்தில் சென்னை என மூன்று இடங்களிலும் இப்படத்தின் ப்ரோமோஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடந்துள்ளது.

    மேலும் இப்படத்திற்கு சூர்யாவின் ரசிகர்கள் 215 அடி-யில் பிரமாண்ட ஓவிய கட்-அவுட் ஒன்றினை நிறுவியுள்ளனர். உலகளவில் நீளமான ஓவிய கட்-அவுட் ஆகும் இது. பின்னர் இப்படமானது தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சியில் வெளியாகும் சூர்யாவின் முதல் திரைப்படமாகும்.

    **Note:Hey! Would you like to share the story of the movie என்.ஜி.கே with us? Please send it to us ([email protected]).