நிமிர்ந்து நில் கதை

  நிமிர்ந்து நில் 2014-ல் வெளிவந்த திரைப்படம். இதை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். ஜெயம் ரவி (இரட்டை வேடம்), அமலாபால், சூரி, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இது ஒரே சமயத்தில் தெலுங்கில் ஜெண்டா பாய் கப்பிராஜ் என்ற பெயரில் நானி நடிக்க படமாக்கப்பட்டு வெளிவந்தது.

  கதை 

  ஆசிரமம் ஒன்றில் தங்கி படித்து வரும் ஜெயம் ரவி, படிப்பு முடிந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சட்டம், ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்று மனசுக்குள் பொங்கி எழும் ஜெயம் ரவி ஒருநாள் போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக் கொள்கிறார். எல்லா தேவையான தாள்களும் சரியாக இருந்தும் அபராதம் கட்டச் சொல்கிறார் போக்குவரத்து காவலர், இல்லையென்றால் 100 ரூபாய் லஞ்சம் கொடுக்கும்படி கேட்கிறார். லஞ்சம் கொடுக்க ஜெயம் ரவி மறுப்பதால் நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதாகிறது. நீதிமன்றத்தில் தன்னிடம் லஞ்சம் கேட்ட எல்லோரையும் மாட்டிவிடுகிறார். இதனால், அந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது அனைவரும் தற்காலிக வேலை நீக்கத்துக்கு ஆளாகிறார்கள். இதனால், பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஜெயம் ரவியை அடித்து துவம்சம் செய்கிறார்கள்.

  ஆனால், அசராத ஜெயம் ரவி ஊழல் அதிகாரிகளை மாட்டிவிட புது திட்டம் தீட்டுகிறார். அதாவது, இல்லாத ஒரு ஆளுக்காக அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் நல்ல அதிகாரிகளின் துணையோடு பெறுகிறார். இதற்காக லஞ்சம் கொடுத்ததை நிழல்படமாகவும் எடுத்துவிடுகிறார்.

  இந்த நிழல்பட ஆதாரத்தை கோபிநாத் உதவியுடன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகிறார். இதில், மருத்துவர், நீதிபதி, காவலர், மக்களவை உறுப்பினர் என 147 பேர் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் முன்னாலும், சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ஜெயம்ரவி. இதனால், கொதிப்படைந்த அதிகாரிகள் ஜெயம் ரவியை பழிவாங்க முடிவெடுக்கின்றனர்.

  இறுதியில் ஜெயம் ரவியை அவர்கள் பழிவாங்கினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie நிமிர்ந்து நில் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).