X
பாவ கதைகள்
Tamil | Hindi

பாவ கதைகள் கதை

பாவ கதைகள் தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல இணையதள ஓடிடி பக்கமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்து நேரடியாக நெட்பிளிக்ஸ் செயலியில் இப்படம் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் அஞ்சலி, கவுதம் மேனன், சிம்ரன், பவானி ஸ்ரீ, சாய் பல்லவி, பிரகாஷ் ராஜ் என தமிழ் திரைப்பட முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை பற்றிய அறிவுப்பு அதிகாரப்பூர்வமாக இணையத்தில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 1ல் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.

நான்கு தமிழ் திரைப்பட முன்னணி இயக்குநர்களால் உருவாகும் இத்திரைப்படம், ஒரு வறட்டு கௌரவத்திற்காக நடக்கும் அநீதியை பற்றி பாவ கதைகள் திரைப்படம் எடுத்துரைக்கிறது. காதல், பாவம், பெருமை, மரியாதை என சில உணர்ச்சிகளை இப்படம் ஜனரஞ்சகமாக கூறியுள்ளது. 2020ஆம் ஆண்டு டிசம்பர் 18ல் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சார்பில் ஆன்லைன் நெட்பிளிக்ஸ் செயலியில் பல மொழிகளில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 

பாவ கதைகள் திரைப்படத்தின் கதை

அத்தியாயம் - 01  "தங்கம்" 

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ், பவானி ஸ்ரீ, காளிதாஸ் ஜெயராம் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், 'பெருமை' என்னும் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

1981ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள காடம்பாளையம் கிராமத்தில் இந்த கதை நடக்கிறது. சத்தார் (காளிதாஸ் ஜெயராம்) ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரும் சரவணன் என்னும் (சாந்தனு பாக்கியராஜ்) சிறுவயதிலிருந்து நண்பர்கள். 

சரவணன், காளிதாஸ் தங்கை ஷஹிரா (பவானி ஸ்ரீ)-யை காதலிக்கிறார். காளிதாஸ் உதவியோடு பவானி ஸ்ரீ-யை திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு ஓடிச் செல்கிறார்.

ஒரு வருடம் கழித்து தனது தாய் தந்தை சமாதானம் ஆனா பின்னர், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப வருகிறார், சாந்தனு பாக்கியராஜ். பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

அத்தியாயம் - 02 "லவ் பண்ணா உற்றணும்"

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி, கல்கி கோச்லின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது காதல் என்னும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

சமூகத்தில் ஒரு நல்லவன் வேடத்தில் பல ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் தலைவர், பின் யாருக்கும் தெரியாமல் அவர்களை ஆணவ கொலை செய்து வருகிறார். அவருக்கு ஆதி லட்சுமி, ஜோதி லட்சுமி என இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு வெளிநாட்டில் வேலை செய்கிறார். மற்றொருவர் கிராமத்தில் இவருடன் வசித்து வருகிறார்.

தனது இளைய மகள் தனது வீட்டில் பணியாற்றும் ஒரு டிரைவரை காதலிக்கிறார் என அறியும் தலைவர், பின் தனது மகளையும், டிரைவரையும் கொடூரமாக கொலை செய்கிறார். இது அறியாமல் வெளிநாட்டில் இருந்து தனது காதல் தந்தையிடம் கூற மற்றொரு மகள் வருகிறார், பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

அத்தியாயம் - 03 "வான்மகள்"

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்ரன், கவுதம் மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் பாவம் என்னும் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இசையமைப்பாளர் கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சத்யா (கௌதம் மேனன்), சிம்ரன் தனது இரண்டு மகள் மற்றும் ஒரு மகனுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். இவரது மகள் வயதிற்கு வர, பெரியவள் என நினைத்து சத்யாவின் இளைய மகளை கடத்தி சென்று கற்பழிக்கின்றனர். ஒரு கும்பல்.

இதனால் இந்த குடும்பத்தின் நிலை சற்று தடுமாறுகிறது. பின்னர் குடும்பத்தின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்கின்றனர், கௌதம் மேனன் மற்றும் சிம்ரன். பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.  

அத்தியாயம் - 04 "ஓர் இரவு"

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கருவத்தினை குறிக்கிறது.

ஊரில் பல குடும்ப பிரச்சனைகளில் தலையிட்டி பஞ்சாயத்து செய்து வருகிறார், பிரகாஷ்ராஜ். அவருக்கு 4 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். தனது இரண்டாவது மகள் சாய் பல்லவி வேலைக்காக வெளியூருக்கு சென்று அங்கு வேறு ஜாதி இளைஞனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

இரண்டு வருடத்திற்கு பின்னர், ஓடி சென்ற தனது மகளின் இருப்பிடத்தை முக நூல் வாயிலாக கண்டறிந்து, அவர்களை தேடி பெங்களூரு செல்கிறார், பிரகாஷ் ராஜ்.

பெங்களுரில் தனது மகள் வாழும் வாழ்க்கையை கண்டு வியப்படைகிறார், பிரகாஷ் ராஜ், மனமிரங்கி பின்னர் சாய் பல்லவியை தனது கிராமத்திற்கு அழைத்து வர, சாய் பல்லவியின் கணவனினம் வேண்டுகிறார்.

சாய்பல்லவிக்கு வளைகாப்பு செய்வதாக சொந்த ஊர்க்கு அழைத்து வந்த பிரகாஷ் ராஜ், பின் சாப்பாட்டில் விஷம் வைத்து ஆணவ கொலை செய்கிறார். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+