பறந்து போ இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகிய ஒரு சிந்தனையை தூண்டும் ரோட்ரிப் டிராமா திரைப்படம். முக்கிய கதாபாத்திரங்களில் சிவா மற்றும் அஞ்சலி நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளராக ந. கே. ஏகாம்பரம், திரைக்கதை, சினிமா மொழி ஆகியவை அற்புதமானதாக உருவாகியுள்ளன.
இந்த திரைப்படத்தை GKS Bros Production, Jio Hotstar, Seven Seas மற்றும் Seven Hills Productions ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
Star Vijay சேனல் ஒளிப்பட மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பெற்றுள்ளது.
கதை
ஒரு தந்தையும் அவரது மகனும் நகர வாழ்க்கை அழுத்தத்தில் இருந்து தப்பிக்க ஒரு பயணத்திற்கு கிளம்புகிறார்கள். அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நல்ல மனிதர்களும் அனுபவங்களும் அவர்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு உணர்ச்சி மிக்க பயணமாக மாறி, அவர்கள் ஒருவரையொருவர் இன்னும் நன்றாக புரிந்து கொள்வதற்கு வழிவகுக்கிறது.
வெளியீட்டு தேதி
பறந்து போ திரைப்படம் 04 ஜூலை 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.