X
பெண்குயின்
Drama | Family | Thriller | 19 Jun 2020 | 132 Mins
Tamil

பெண்குயின் கதை

பெண்குயின் இயக்குனர் ஈஸ்வர் காத்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம், இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளராக பிரபல தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அணில் க்ரிஷ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான "ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்" நிறுவனம் தயாரிக்க, அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் வீடியோ குழு இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.



பெண்குயின் படத்தின் கதைக்கரு

கீர்த்தி சுரேஷ், லிங்கா என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு அஜய் என்னும் ஒரு குழந்தை பிறக்கிறது, அக்குழந்தை தீடீரென காணாமல் போக கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவருக்கு கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் மற்றும் பல சண்டைகள் நடக்கிறது. லிங்காவை விவாகரத்து செய்யும் கீர்த்தி, பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் (கௌதம்) என்பவரை மறுமணம் செய்து கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் காணமல் போன அந்த குழந்தை (அஜய்) மீண்டும் கீர்த்தி முன் வந்து நிற்கிறான். பின்னர் என்ன நடந்து என்பதே படத்தின் கதை.

பெண்குயின் படத்தின் ரிலீஸ் தகவல்கள்

திரைத்துறையில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி முக்கிய நடிப்பில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருந்த நிலையில் தமிழக மற்றும் தென்னிந்திய தியேட்டர் பனி நிறுத்தம் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதிகள் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையரங்குகள் சில காரணங்களால் தாற்காலியமாக மூடப்பட்ட நிலையில் இப்படம் ஜூன் 19ல் இணையதள ஓ.டி.டி பக்கமான அமேசான் திரைப்பட பக்கத்தில் வெளியாகவுள்ளது. 

பெண்குயின் படத்தின் பிரத்யேக தகவல்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் மூலம் முதன் முதலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையில் புகழ் பெற்றுள்ளார். மேலும் பெண்குயின் திரைப்படம் தமிழில் நேரடியாக ஓ.டி.டி பக்கங்களில் வெளியாகும் இரண்டாவது திரைப்படமாகும். ஓ.டி.டி பக்கத்தில் நேரடியாக வெளியாகியுள்ள முதல் திரைப்படம் நடிகை ஜோதிகா முன்னனி நடிப்பில் உருவான "பொன்மகள் வந்தாள்" திரைப்படமாகும்.

இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்புகள் 2019 அக்டோபர் மாதம் 12ல் வெளியானது, இப்படத்தின் படப்பிடிப்பு 2019 நவம்பர் மாதம் முற்றிலும் முடித்து எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர் படக்குழுவினர். இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாவதால் இப்படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+