பெருசு - பெருசு இளங்கோ ராம் இயக்கிய தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும், இந்த திரைப்படத்தில் வைபவ் ரெட்டி மற்றும் சுனில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர், அவர்களின் நகைச்சுவை ஒட்டுமொத்தமாக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.
கதை
இரண்டு சகோதரர்கள் அவர்களது தந்தையின் இறப்புக்கு பின்னால், அவரது இறந்த உடலில் ஏற்பட்டு இருந்த மாற்றத்தை பார்த்து அதிர்ந்து போனார்கள். இந்த மாற்றம் அவரது இறுதி சடங்கில் ஒரு பெரிய பிரணயமாக வெடிக்கும் என்ற நினைத்து பயந்து போன அவர்கள். அதனை மறைத்து அவரது இறுதி சடங்கினை நல்லபடியாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளார்கள். அவர்களது திட்டம் நல்லபடியாக நடந்து முடிந்ததா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை.
வெளியீட்டு தேதி
பெருசு திரைப்படம் மார்ச் 14 ஆம் 2025-ல் திரையரங்குகளில் வெளியானது.