பிசாசு 2, 2014 ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள பிசாசு திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் திகில் திரைப்படம். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என இயக்குனர் மிஸ்க்கின் எழுதியுள்ளார்.
இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான "சைக்கோ" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்குமார் பிச்சுமணி மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகையான ஆண்ட்ரியா இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிசாசு 2 படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்க, தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் முருகானந்தம் இப்படத்தினை தயாரிக்கிறார்.