பிஸ்தா இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சதீஷ் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தரன் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படமானது இப்படத்தின் இசையமைப்பாளர் தரன்-னின் இசையில் உருவாகும் 25-வது திரைப்படமாகும்.
ப்ரோமோஷன்ஸ்
இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் இணையதளத்தில் 2019 மே 31-ல் இப்பட நாயகனின் பிறந்தநாள் அன்று வெளியிட்டுள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் நகைச்சுவை ஜாம்பவான் செந்தில் உடன் யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.