போகிமொன்:டிடெக்ட்டிவ் பிக்கச்சு (2019) ஹாலிவுட் இயக்குனரான ராப் லெட்டர்மேன் இயக்கத்தில் நகர்ப்புற கற்பனை வடிவிலான செயற்கையான தோற்றங்களை, அறிவியல் தத்ரூபங்கள் கொண்டு உருவான பிரமாண்ட திரைப்படம்.
1996-ம் ஆண்டு அனிமேஷன் கதையாக அறிமுகமான போகிமொன் தொடர் உலகெங்கும் உள்ள சிறுவர்களை கவர்ந்து பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது, பின்னர் இதனை தொடர்ந்து பல அனிமேஷன் திரைப்படங்களும், தொடர்களும், விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள் என பல ஊடகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் இயக்குனரான ராப் லெட்டர்மேன் திரைக்கதை எழுத்தாளர்களான பென்ஜி சமித், டேன் ஹெர்னாண்டஸ், டெரெக் கொனோலி என்பவர்களுடன் இணைந்து திரைக்கதை இயக்கியுள்ளார்.
இவர்கள் 2016-ம் ஆண்டு வீடியோ விளையாட்டு தொடர்பாக பணியாற்றியபோது போகிமொன் பிரான்சீஸ் என்னும் நிறுவனத்தில் சடோஷி தஜிரி என்னும் ஜப்பான் அனிமேஷன் வடிவமைப்பாளர்களை கொண்டு உருவான டிடெக்ட்டிவ் பிக்கச்சு என்னும் வீடியோ விளையாட்டு கதையினை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்.
இத்திரைப்படத்தில் தற்போதுள்ள நவீன அறிவியல் வளர்ச்சியை கொண்டு போகிமொன் என்று அழைக்கப்படும் பல்வேறு தத்ரூபமான கதாபாத்திரங்களை திரையில் மனிதனுக்கு நிகரான உண்மையான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கதை
ரிமெ நகரில் போகிமொன்களுடன் மனிதர்களும் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள். அங்கு 21 வயதுள்ள ஒரு இளைமையான போகெமான் பயிற்சியாளர் டிம் குட்மேன் ஒரு பேசும் பிக்கச்சுவுடன் நட்புக்குள்ளாகிறார். இவ்விருவர்களும் சேர்ந்து ஒரு விபத்திற்கு பின்னர் காணாமல் போன ஹாரி குட்மேன் (டிம் குட்மேன் தந்தை)-யை தேடி செல்கின்றனர்.
இவர்களுடன் இடையில் லூசி ஸ்டீவன்ஸ்(பத்திரிக்கை செய்தியாளர்) மற்றும் இவரது போகெமான் சைடக் இருவரும் குட்மேனின் தேடல் பயணத்தில் இணைகின்றனர். இவ்விருவரும் சேர்ந்து போகிமொன் உலகத்தை ஆபத்திற்குள்ளாக்கும் ஏதோவொன்றைக் கண்டறிகின்றனர். பின்னர் இவ்விருவரும் சேர்ந்து அதனை எதிர்த்து போராடுவதே படத்தின் கதை.