பொன் ஒன்று கண்டேன் - இயக்குனர் பிரியா வி இயக்கத்தில் அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி என பலர் நடித்திருக்கும் காதல் - நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தமிழ் பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது 'YSR பிலிம்ஸ் புரொடக்ஷன்' நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இப்படத்திற்கு தானே இசையமைத்துள்ளார்.
காதல் - நட்பு - நகைச்சுவை கலந்த திரைக்கதையில் உருவாகியுள்ள 'பொன் ஒன்று கண்டேன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அட் பகத் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் தீபா ஷங்கர், சச்சு என பல தமிழ் திரைப்பட கலைஞர்கள் நடித்துள்ளனர்.
பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகமல் ஜியோ சினிமாஸ் ஓடிடி & கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 14, 2024ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன் ஒன்று கண்டேன் படம் நேரடி தொலைக்காட்சி படமாக வெளியாகிறது.
பொன் ஒன்று கண்டேன் திரைப்படத்தின் கதை
கதைக்கரு: அசோக் செல்வன் & வசந்த் ரவி இருவரும் ஐஸ்வர்யா லக்ஷ்மியை காதலிக்கின்றனர். நாயகிக்கு இவர்களில் யாரை வாழ்க்கை துணையாக தேர்ந்தேடுப்பது என சந்தேகம் எழுகிறது. இறுதியில் என்ன ஆனது யார் ஐஸ்வர்யா லக்ஷ்மியை திருமணம் செய்கின்றனர் என்பதே இப்படத்தின் கதைக்கரு.