போர் - இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை டி சீரிஸ் நிறுவனம் மற்றும் இப்படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளராக டி சீரிஸ் இசைக்குழு இசையமைத்துள்ளது.
போர் திரைப்படத்தின் கதை
கல்லூரியில் சீனியரான அர்ஜுன் தாஸ் மற்றும் ஜூனியராக சேரும் காளிதாஸ் ஜெயராமுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதல் தான் இந்த போர் படத்தின் கதை.
கல்லூரியில் இந்த பிரச்சனை தொடங்காமல் இருவருக்கும் இடையே சிறு வயதில் இருந்தே பகை என சொல்கின்றனர். ஆனால், அதற்கான காரணத்தை இயக்குநர் தெளிவுப்படுத்தவில்லை. காளிதாஸ் ஜெயராம் அந்த பல்கலைக் கழகத்தில் என்ன படிப்பு படிக்கிறார் என்பதே ஆரம்பத்தில் குழப்பமாக இருந்த நிலையில், அர்ஜுன் ரெட்டி போல திடீரென மருத்துவ மாணவராக வந்து நிற்கிறார். கல்லூரியில் நடக்கும் ராகிங், தேர்தல் உள்ளிட்ட விஷயங்களை எந்தளவுக்கு மிகைப்படுத்தி காட்ட முடியுமோ அப்படியொரு போரான படமாக இந்த ’போர்’ படத்தை இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கி இருக்கிறார்