புத்தம் புது காலை தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்களான சுதா கொங்கரா, சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன், கவுதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். இப்படம் அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு 2020 அக்டோபர் 16ல் அமேசான் ஓடிடி செயலியில் வெளியானது.
இத்திரைப்படம் 2020-ஆம் ஆண்டின் கோவிட் நோய்த்தொற்று காரணமாக இந்திய அரசால் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அச்சமயம் வெவ்வேறு இடங்களில் மாட்டிக்கொள்ளும் ஒரு 5 நபர்களின் கதைகளை சுவாரஸ்யமாக அழகனாக திரைக்கதை மூலம் ஒரு குறும்படம் பாணியில் ஐந்து இயக்குனர்கள் இயக்கி, அந்தாலஜி திரைப்படம் மூலம் இப்படத்தினை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தில் வெளியிட்டுள்ளனர்.
இளமை இதோ இதோ
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு காதல் கதையாக உருவான திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தினை நிக்கித் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, சங்கத்தமிழன் எடிட்டிங் செய்துள்ளார்.
ஜெய்ராம் (ராஜிவ் பத்மநாபன்), தனது காதலியின் வருகையினை எதிபார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்காக வீட்டு வேலையை செய்யும் பெண்ணை அவரசமாக கிளப்புகிறார். பின் இவரின் கடந்த கால காதலி ஊர்வசி (லட்சுமி கிருஷ்ணன்) யோகா பயிற்சி என தனது மகனிடம் பொய் கூறி ஜெய்ராம் இல்லத்திற்கு வருகிறார்.
இரண்டு நாட்கள் ஜெயராம் இல்லத்தில் தங்க முடிவெடுத்து வரும் ஊர்வசி, மத்திய அரசின் 21 நாட்கள் முழு ஊரடங்கு திட்டம் காரணமாக ஜெய் ராம் இல்லத்தில் மாட்டிக்கொள்கிறார்.
இவர்களின் காதல் கதையை அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைத்துள்ளார் இயக்குனர் சுதா, இவர்களின் இளமை தோற்றத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளனர்.
அவரும் நானும் - அவளும் நானும்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது இத்திரைப்படம்.
தனது மகளின் காதல் திருமணம் காரணமாக அவர்களை ஒதுக்கிவிட்டு தனியாக வாழும் எம். எஸ். பாஸ்கர் பல நாட்களுக்கு பின்னர் தனது பேத்தி ரித்து வர்மா ஊரடங்கு காரணத்தால் வேறு வழி இன்றி தனது இல்லத்திற்கு வருவதை ஆசையாக எதிர்பார்த்து இருக்கிறார்.
இத்திரைப்படம் எம். எஸ். பாஸ்கர் பார்வையிலும், ரித்து வர்மா பார்வையிலும் அவர்களின் உணர்ச்சிகளை பற்றி எடுத்துரைக்கிறது.
காஃபி எனிஒன்?
இயக்குனர் சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் சுஹாசினி, அணு ஹாசன், ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.
தனது தாய் சுய நினைவு இல்லாமல் கோமாவில் இருப்பதை அறியும் சுஹாசினி மற்றும் அணு ஹாசன் வெளிநாட்டில் இருந்து தனது இல்லத்திற்கு வருகிறார். அங்கு நடக்கும் பிரச்சனை மற்றும் இவர்களின் ஒற்றுமை என இப்படம் அமைந்துள்ளது.
ரீ யூனியன்
இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஆண்ட்ரியா, லீலா சாம்சன் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
தனது இருசக்கர வாகனம் செயலிழக்க, அச்சமயம் தனது தோழனின் வீடு அருகில் இருப்பதை அறியும் ஆண்ட்ரியா தனது தோழன் வீட்டிற்கு வருகிறார். ஊரடங்கு காரணத்தால் வேறு வழி இல்லாமல் தனது நண்பனின் இல்லத்தில் மாட்டி கொள்கிறார். பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
மிராக்கல்
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் திரைப்படம். நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம்.
பணத்திற்காக போராடும் பாபி சிம்ஹா, ஒரு பழைய வாகனத்தி பல லட்ச ரூபாய் பணம் இருப்பதை அறிந்து அதனை திருட முயற்சி செய்கிறார். ஆனால் அங்கு பணம் இல்லை என அறிந்து கோபத்தில் அந்த காரின் சக்கரத்தினை கழட்டி விற்க முடிவெடுக்கிறார். பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.