ராதே ஷ்யாம் இயக்குனர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் இசையமைப்பாளர் அமித் திரிவேடி இசையமைத்துள்ளார்.
ராதே ஷியாம் கதை
26 நவம்பர் 1976ல் படத்தின் கதை தொடங்குகிறது. இந்தியாவில் பெரும் ஜோதிடராக இருக்கும் சத்யராஜ் அறிவியலுக்கு முன்னரே ஜோதிடம், வானவியல் சாஸ்திரம் என அனைத்தையும் கணித்து கூறும் திறன் படைத்தவர். பின் சத்யராஜின் சிஷியனும் புகழ் பெற்ற கைரேகை ஜோதிடருமான விக்ரமாதித்யா (பிரபாஸ்) அறிமுகமாகிறார்.
பிரபாஸ் சில காரணங்களால் இந்தியாவை விட்டு சென்று இத்தாலியில் ரோம் நகரில் வசித்து வருகிறார். தனது கையில் காதல் ரேகை இல்லையென எந்த பெண்ணனையும் காதலிக்காமல், பெண்களுடன் ஜாலியாக சுற்றித்தெரியும் பிரபாஸ் ஒரு ரயில் வண்டியில் நாயகி பூஜா ஹெக்டே-வை சந்திக்கிறார்.
நாயகி பூஜா ஹெக்டே மருந்து கண்டுபிடிக்காத ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் வாழ்நாள் வெறும் 60 நாள்கள் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படியிருக்க நாயகியும் நாயகனும் ஒரு ரயில் வண்டியில் சந்திக்கின்றனர். இருவரும் தங்களின் மனதை பறிகொடுத்து காதலிக்க தொடங்குகின்றனர். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதை.