X
ரகு தாத்தா
Comedy | 15 Aug 2024 | U | 134 Mins
Tamil

ரகு தாத்தா கதை

ரகு தாத்தா - இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தில் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் என சினிமா பிரபலங்கள் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபல கன்னட சினிமா தயாரிப்பு நிறுவனமான 'ஹோம்பலே பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள 'ரகு தாத்தா' திரைப்படத்தினை பிரபல தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனமான 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவன அதிபர் திரு. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார்.

ஜனரஞ்சகமான படமாக அமைந்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் யாமினி யங்கனமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சுரேஷ் டி எஸ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின ஸ்பெஷல் படமாக திரையரங்கில் வெளியாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.




ரகு தாத்தா திரைப்படத்தின் கதை

கிராமத்தில் அதிகம் படித்த முதல் பெண்ணான கீர்த்தி சுரேஷ், அந்த கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார், அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சிப்பது யார்? பலரை எதிர்த்து கீர்த்தி சுரேஷ் சாதித்தாரா என்பதே படத்தின் கதை.

முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவை ஆட்சி செய்து வரும் காலத்தில் வள்ளுவன்பேட்டை கிராமத்தில் இந்தி கற்றுக் கொடுக்கும் சபா இருக்கக் கூடாது என போராடி அதற்கு பூட்டுப் போடும் கயல்விழி பாண்டியன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். வங்கியில் இந்தி படித்தால் தான் புரமோஷன் கிடைக்கும் என வங்கி அதிகாரி சொல்லும் போது, அவரையும் மிரட்டுகிறார். க. பா எனும் பெயரில் ஆண் எழுத்தாளர் போல சிறுகதைகளையும் எழுதி வருகிறார். அவருக்கு தமிழ் செல்வன் (ரவிந்திர விஜய்) ரசிகராக உள்ளார். தாத்தா எம்.எஸ். பாஸ்கருக்கு கொடிய நோய் ஏற்பட்ட நிலையில், சீக்கிரம் போய் விடுவார் என டாக்டர் சொல்ல, அவருடைய கடைசி ஆசைகளில் ஒன்றாக பேத்தியின் திருமணம் இடம்பெறுகிறது.

தன்னை புரிந்துக் கொண்டும் தனது பெண்ணிய கருத்துக்களை மதிக்கும் நபராக இருக்கும் தமிழ் செல்வனையே திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கும் கயல்விழி ஏன் இந்தி கற்கிறார், இந்தி தேர்வு எழுதுகிறார், இந்தி சபாவை திறந்தே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் அந்த இந்தி பண்டிதர் (ஆனந்தசாமி) அந்த சபாவை திறந்தாரா என பல கேள்விகளுக்கு விடையாக இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+