X
ராக்கி
Action | Drama | 12 Apr 2019 | U/A | 206 Mins
Tamil

ராக்கி கதை

ராக்கி (தி ரிவென்ஜ்) இயக்குனர் கே.சி.பொகாடியா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், நாசர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சரண் அர்ஜுன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் விவேக் தனது இணையதள (ட்விட்டர்) பக்கத்தின் மூலம் மார்ச் 28, 2019-ல் வெளியிட்டுள்ளார்.

கதை
இத்திரைப்படத்தின் ஒரு நேர்மையான காவலராக வருகிறார் சந்தோஷ் (ஸ்ரீகாந்த்), இவர் ஒரு விபத்தில் அடிபட்ட நாய்க்குட்டி ஒன்றினை  காப்பாற்றி சிகிச்சை அழித்து,  ராக்கி என்று பெயர் வைக்கிறார். இவரது மனைவிக்கும் (ஈஷான்யா) ராக்கியை பிடிக்க இருவரும் அந்நாய்க்குட்டியை வளர்க்கின்றனர்.

ராக்கி மிகவும் புத்திசாலியாக இருப்பதால் காவலரின் துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார் சந்தோஷ். கமிஷனர் செல்வம் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர்.

எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். சிறையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார். ராக்கியும் அவருடன் செல்கிறது.

எம்.எல்.ஏ.சாயாஜி, சுந்தர், இன்ஸ்பெக்டர் கள் ராஜா, சேகர் நால்வரும் கூட்டுச்சதி செய்து சந்தோஷைக்கொலை செய்துவிடுகின்றனர். இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் இருவரும் கமிஷனர் செல்வத்திடம், சந்தோஷைக் கொலை செய்தது யாரென்று தெரியவில்லை என்று பொய் சொல்கின்றனர். ஆனால், ராக்கி சந்தோஷைக் கொலை செய்த எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர், ராஜா, சேகர் ஆகிய நால்வரையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பது தான் கதை", என படக்குழு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+