twitter

    சார்பட்டா பரம்பரை கதை

    சார்பட்டா (சார்பட்டா பரம்பரை) இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன், பசுபதி, துஸ்ரா என தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை 'நீலம் புரோடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் முதற்கட்ட ஃபர்ஸ்ட் காபி முறையில் தயாரித்து பிரபல தயாரிப்பாளர் ஷண்முகம் தக்ஷணராஜ்-யிடம் ஒப்படைத்துள்ளார். சார்பட்டா படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.




    சார்பட்டா பரம்பரை படத்தின் கதை

    கதைக்கரு: வடசென்னையில் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் பாக்ஸிங் விளையாட்டில் பெரிய புகழ் பெற்ற 'சார்பட்டா பரம்பரை' குழு சில காரணங்களால் நான்காக பிரிகிறது. அதில் வலுவான குழுவாக இருக்கக்கூடிய சார்பட்டா மற்றும் இடியாப்ப பரம்பரைகளுக்கு இடையே நடக்கும் பாக்ஸிங் யுத்தம் தான் இப்படத்தின் கதை.

    கதை

    முனிரத்னம் (கிஷோர்) பாக்ஸிங் விளையாட்டில் பிரபலமானவர். இவர் சார்பட்டா பரம்பரை சார்பில் போட்டியிட்டு பல முறை வெற்றி கண்டவர். ஆனால் தான் என்ற அகம்பாவத்தில் சில மேல் மக்களை பகைத்து ஒரு ரவுடியாக சுற்றி திருகிறார். இவரின் வளர்ச்சியை கண்டு பொறுக்காத தணிகை (மணிகண்டன்) மற்றும் அவரது அண்ணன் சூழ்ச்சி செய்து முனிரத்னத்தை கொள்கின்றனர்.

    முனிரத்னத்தின் மகனான கபிலன் (ஆர்யா) மற்றும் அவரது தாய் பாக்கியம் (அனுபமா குமார்) ஜான் விஜய் ஆதரவில் உள்ளனர். தன் கணவர் பாக்ஸிங் விளையாட்டால் தான் இறந்தார் என கூறி மகனை கண்டித்து வளர்க்கிறார், பாக்கியம்.

    சார்பட்டா பரம்பரை பின்னர் இடியாப்ப பரம்பரை, சுண்ணாம்பு குளம் பரம்பரை, எல்லப்பா பரம்பரை என நான்காக பிரிந்திருக்கிறது. இவற்றில் முக்கிய பரம்பரையான சார்பட்டா மற்றும் இடியாப்ப பரம்பரைகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிகழ்கிறது. இடியாப்ப பரம்பரையில் வேம்புலி (ஜான்) யாரும் அசைக்க முடியாத வீரனாக உள்ளார்.

    சார்பட்டா பரம்பரையின் குரு ரங்கன் வாத்தியார் (பசுபதி) ஒரு நல்ல ஆசானாக கலையரசன், சந்தோஷ் என பல வீரர்களுக்கு வழிகாட்டுகிறார். கபிலனுக்கு ரங்கன் மீது நல்ல மரியாதையும், பண்பும் சற்று அதிகமாகவே உள்ளது.

    இடியாப்ப பரம்பரைக்கு எதிராக சார்பட்டா பரம்பரையில் இருந்து ராமன் (சந்தோஷ் பிரதாப்)யை களம் இறக்குகின்றனர். ஆனால் ராமன் ஆத்திரப்பட்டு தனது குருவான ரங்கன் வாத்தியாரை இழிவு படுத்த, அதனால் கபிலன் ராமனை சண்டைக்கு அழைத்து தோல்வியடைய செய்கிறார். இதனை கண்ட ரங்கன் கபிலனின் திறனை கண்டு வியக்கிறார். வேடிக்கை மட்டும் பார்த்து செல்லும் கபிலன் (ஆர்யா)-வின் திறனை கண்டு வியக்கும் ரங்கன் (பசுபதி) கபிலனை வேம்புலிக்கு எதிராக களம் இறங்குகிறார்.

    திடீரென கபிலனுக்கு கிடைத்த வாய்ப்பினை கண்டு சார்பட்டா பரம்பரையில் பலர் பொறாமை அடைகின்றனர். இதற்கு சவாலாக டான்சிங் ரோஸ் (ஷபீர்)-க்கு எதிராக கபிலனை களம் இறங்குகின்றனர். அதில் கபிலன் வெறும் இரண்டே சுற்றில் டான்சிங் ரோசை வீழ்த்தி வெற்றி அடைகிறார்.

    அடுத்து இடியாப்ப பரம்பரையின் வெற்றி வீரன் வேம்புலிக்கு எதிராக கபிலனை களம் இறக்குகின்றனர். அதில் கபிலன் வெற்றி அடையும் நேரத்தில் தணிகை (மணிகண்டன்), ராமன் (சந்தோஷ் பிரதாப்) என சிலர் சூழ்ச்சி செய்து போட்டியை கலவரம் செய்து நிறுத்தி, கபிலனை மேடையில் நிர்வாணம் படுத்துகிறார்கள். தொடர்ச்சியாக சார்பட்டா பரம்பரையின் குரு சில அரசியல் காரணத்தால் சிறைக்கு செல்கிறார்.

    இதனால் வெறுப்படைந்த கபிலன் சிறிது காலம் அமைதியாக வாழ்கிறார். வெற்றி செல்வன் (கலையரசன்)-க்கு கிடைத்த ஒரு வாய்ப்பிற்கு கபிலனை தன்னுடன் அழைத்து செல்கிறார். அங்கு எதிர்பாராமல் தணிகை (மணிகண்டன்)-யை காணும் கபிலன் ஆத்திரத்தில் அவரை வெட்டுகிறார்.

    குரு இல்லாமல் கபிலன் வழிமாறி போதைக்கு அடிமையாகிறார். இதனால் இவரது குடும்பத்தில் பல சிக்கல்கள் உருவாகிறது. தனது குரு சிறையிலிருந்து வெளியே வந்ததும் கபிலரின் தோற்றத்தை கண்டு மனமுடைகிறார். அடுத்து நடக்கும் ஒரு பாக்ஸிங் போட்டியில் வெற்றி காணும் வேம்புலி (ஜான்) மீண்டும் ரங்கன் (பசுபதி)யை வம்புக்கு இழுக்க, அங்கு இருந்த கபிலன் (ஆர்யா) மற்றும் போட்டியை காண வந்த பொது மக்கள் வேம்புலி செய்த தவறினை சுட்டி காட்டி வேம்புலியை அவமான படுத்துகிறார்கள்.

    இதனால் ஆத்திரமடையும் வேம்புலி, சார்பட்டா பரம்பரையில் உள்ள கபிலனுக்கு போட்டியிட சவால் விடுகிறார். ஆனால் அதற்கு தயாராக கபிலன் இல்லாதால் கபிலனை போட்டியிட வேண்டாம் என பலர் எதிர்கின்றனர். 

    இதனால் மனமுடைந்த கபிலனை அழைத்து சென்று கபிலனின் தந்தை முனிரத்னம் (கிஷோர்)-ன் குருவான பீடி ராயப்பனிடம் கபிலனை மீண்டும் ஒரு பாக்ஸிங் வீரனாக உருவாக்குகின்றனர், டாடி (ஜான் விஜய்) மற்றும் பாக்கியம் (அனுபமா குமார்).

    கபிலன் (ஆர்யா)-வின் வாழ்க்கையை சீரழிக்கவும், அவரது வளர்ச்சியை தடுக்க நினைக்கும் தணிகை (மணிகண்டன்) அடுத்தடுத்து பல இன்னல்களை உருவாக்குகிறார். அதனை மீறி கபிலன் இறுதி போட்டியில் கலந்து கொண்டு தன்னை நிரூபித்தாரா என்பதே படத்தின் கதை.

    சார்பட்டா பரம்பரை படத்தின் தகவல்கள்

    சார்பட்டா பரம்பரை திரைப்படம் அதிரடி மற்றும் ஸ்போர்ட்ஸ் கலவையில் ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையாக குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 1980ல் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை என்ற இரு பாக்சிங் பரம்பரை குழுவிற்கு இடையே நடக்கும் பாக்சிங் மோதல் படமாகும்.

    சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் கார்த்தியை நாயகனாக நடிக்க முதலில் அழைத்துள்ளனர், படக்குழுவினர். ஆனால் சில காரணங்களால் கார்த்தி நிராகரிக்க, பின் நடிகர் ஆர்யா இத்திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கொரோன காரணத்தால் படப்பிடிப்புக்கு தடை விதித்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின் 2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் 14 வரை இப்படத்தின் படப்பிடிப்பு வடசென்னை மற்றும் அதனை சார்ந்த இடங்களில் முற்றிலுகமாக முடிக்கப்பட்டு, அமேசான் பிரைம் ஓடிடியில் 2021 ஜூன் 22ல் சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

    சார்பட்டா பரம்பரை ரிலீஸ்

    தமிழகத்தில் கொரோன முதல் மற்றும் இரண்டாம் அலை காரணத்தால் திரையரங்குகள் மூடப்பட்டது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் அமேசான் பிரைம் ஆன்லைன் ஓடிடியில் 2021 ஜூலை 22ல் நேரடியாக வெளியானது.

    சார்பட்டா பரம்பரை படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர பக்கத்தில் 2021 ஜூலை 13ல் வெளியிட்டார்.

    **Note:Hey! Would you like to share the story of the movie சார்பட்டா பரம்பரை with us? Please send it to us ([email protected]).