X
டெனெட்
Action | 04 Dec 2020 |
Tamil

டெனெட் கதை

டெனெட், பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அறிவியல் புனைவு மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எம்மா தாமஸ் மற்றும் இப்படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இசையமைப்பாளர் லுட்விக் கோரன்ஸ்ஸன் இசையில், ஒளிப்பதிவாளர் ஹோய்டி வேன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் ஜெனிபர் லேம் எடிட்டிங் பணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், காலங்களை அறிவியல் மூலம் மாற்றும் ஒரு அதிரடி திரைப்படமாகும்.

ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், எலிசபெத் டேபிக்கி, டிம்பிள் கபடியா என ஹாலிவுட் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படம், அதிரடி மற்றும் அறிவியல் சம்மந்தமான திரைக்கதையில் பிரமாண்டமாக உருவாகி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக உலக சினிமாவால் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்.

டெனெட் திரைப்படத்தின் கதை

மூன்றாம் உலகப் போரின் தொடக்கத்தைத் தடுக்க ஒரு ரகசிய அதிகாரி (வாஷிங்டன்) ஆபத்தான சில சாகசங்களை அறிவியல் கண்டுபிடிப்பு கருவிகளின் மூலம் காலத்தை தனக்கேற்றவாறு வளைக்கும் பணியை மேற்கொள்கிறார்.

டெனெட் திரைப்படத்தின் ரிலீஸ்

டெனெட் திரைப்படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் எம்மா தாம்சன் இணைந்து இப்படத்தினை 200 மில்லியன் டாலர் பொருட்செலவில் தயரித்துள்ளனர். இப்படத்தினை தயாரித்த இவர்கள், டெனெட் திரைப்படத்தை ஏழு நாடுகளில் ஐ-மாக்ஸ் மற்றும் 70 மிமீ திரை ஆகியவற்றில் மட்டுமே பிரத்தியேகமாக படமாக்க நோலன் திட்டமிட்டுள்ளார்.

பின்னர் டெனெட் திரைப்படத்தினை 'வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸ்' மற்றும் 'சின்கோபி' திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இணைந்து டெனெட் திரைப்படத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்ய தயாரிப்பாளர்களிடம் இருந்து இப்படத்தினை வாங்கியுள்ளது.

இத்திரைப்படம் 2019 ஜூலை மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோன நோய் காரணத்தால் உலகளவில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இப்படம் ஜூலை 30, ஆகஸ்ட் 12 என  வெளியிட்டு தேதி தள்ளிச்சென்றது. 

டெனெட் திரைப்படத்தினை முதலில் அமெரிக்கா நாட்டில் ஆகஸ்ட் 26, 2020ல் வெளியிட்ட படக்குழு, பின்னர் சில நிபந்தனைகளுடன் செப்டம்பர் 3, 2020ல் உலகம் முழுவதும் திரையரங்குகள் திரைக்கப்பட்ட நாடுகளில் மட்டும் வெளியிட்டுள்ளது.

இந்தியா ரிலீஸ்: டெனெட் திரைப்படம் இந்தியாவில் 2020 டிசம்பர் 4ல் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+