twitter

    தலைவா கதை

    தலைவா ஆகஸ்ட் 2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம். ஏ. எல். விஜய் இயக்கத்தில் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜயும், அவருக்கு இணையாக அமலா பாலும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்தியராஜும் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி  ஜி வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

    கதை: 

    படத்தின் முதல் பாதியின் பெரும்பகுதியின் கதைக்களம் ஆஸ்திரேலியா, பிற்பகுதி மும்பாயில் நடைபெறுகிறது. மும்பாயில் தமிழர்களின் தலைவனும், மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவுமாக இருப்பவர் "அண்ணா". தனது முடிவு தாயை இழந்த தனது விஸ்வாவைப் பாதிக்காது இருப்பதற்காகக் குழந்தையாக இருக்கும்போதே அவனை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிடுகிறார். பொலீசும், அண்ணாவின் எதிரிகளும் அவரைப் பிடிக்க முயன்றும் முடியாத நிலையில், வளர்ந்து இளைஞனாக இருந்த விஸ்வாவைத் தந்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவந்து அவனைப் பயன்படுத்தி "அண்ணா"வைப் பிடித்துக் கொன்றுவிடுகிறார்கள். பின்னர், தந்தையின் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ளும் விஸ்வா எதிரிகளை அழிப்பதுடன், தந்தையின் பாதையிலேயே செல்வதுதான் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie தலைவா with us? Please send it to us ([email protected]).