twitter
    Tamil»Movies»Thambi»Story

    தம்பி கதை

    தம்பி (தம்பி 2019) பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுராஜ் சடனஹ் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.

    எமோஷனல் மற்றும் அதிரடி படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராஜசேகர் மற்றும் படத்தொகுப்பாளர் விநாயக் இணைந்து பணியாற்றியுள்ளனர்.


    தம்பி படத்தின் பிரத்தியேக தகவல்கள்

    இப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் 2015ம் ஆண்டு பாபநாசம் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இவர் மலையாள திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கி பல விருதுகளை பெற்று புகழ் பெற்றவர்.

    இத்திரைப்படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் உருவாகி 2019 டிசம்பர் 20ல் வெளியாகியுள்ளது. இப்படத்தினை பற்றிய அறிவிப்புகள் "கார்த்தி 20" என்னும் தாற்காலிய பெயருடன் படப்பிடிப்பு புஜைகள் நடைப்பெற்று இணையத்தில் வெளியானது. தம்பி திரைப்படம் நடிகர் கார்த்தியின் திரைவாழ்வில் இவரது 20வது படமாகும். இப்படத்தின் தலைப்பு 2019 நவம்பர் 15ல் இணையத்தில் வெளியானது. அன்றே "டோங்கா" என இப்படத்தின் தெலுங்கு தலைப்பும் வெளியானது.

    தம்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019 நவம்பர் 15ல் தெலுங்கு மற்றும் தமிழ் தலைப்புடன் வெளியானது. இப்படத்தின் டீஸர் 2019 நவம்பர் 16ல் தமிழில் சூர்யா மற்றும் தெலுங்கில் நாகர்ஜுனா ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிடப்பட்டது. தம்பி படத்தின் ட்ரைலர் டிசம்பர் 10ல் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

    இப்படத்தின் தமிழ் விநியோகஸ்தரராக சக்தி பிலிம் பேக்டரி நிறுவனமும், தெலுங்கில் ஹர்ஷிதா மூவிஸ் நிறுவனமும் விநியோகம் செய்துள்ளது.

    இப்படத்தின் பாடல்கள் சென்னை சத்யம் சினிமாஸ்ல் பிரமாண்டமாக நடைபெற்றது, அதற்கு நடிகர் சூர்யா சிறப்பு விருதினராக பங்குபெற்றுள்ளார்.

    தம்பி படத்தின் கதை

    சத்யானந்தம் (சத்யராஜ்) மற்றும் சீதா ஆகியோருக்கு பார்வதி மற்றும் சரவணன் வாரிசுகளாக இருக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் நடக்கின்ற சிறு விபத்தால் சரவணன் காணாமல் போகிறான். சிறு வயதில் தொலைந்த சரவணனை பல வருடங்களாக தேடுகின்றனர் குடும்பத்தினர்.

    கோவாவில் டுரிஸ்ட் கையேட் ஆகா இருந்து கொண்டு  கொல்லை மற்றும் பண மோசடி செய்து வரும் கார்த்தி சில கும்பலால் தாக்கப்படுகிறார். அப்போது இவரை சிறு வயதில் காணாமல் போன தனது மகன் சரவணன் என அடையாளம் காண்கிறார் சத்யராஜ். பின்னர் சரவணனாக சத்யராஜ் உடன் இல்லத்திற்கு செல்கிறார் கார்த்தி.

    கார்த்தி தான் சரவணன் என எண்ணி அவரை கொலை செய்யா சில கும்பல் துரத்துகிறது, இறுதியில் நடப்பது என்ன? யார் அந்த சரவணன்? சிறுவயதில்லையே தொலைந்த போன அவரை கொலை செய்ய நினைப்பதற்கு காரணம் என்ன? என்பதே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie தம்பி with us? Please send it to us ([email protected]).