துப்பறிவாளன் 2, இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் 2017ம் ஆண்டு விஷால் நடிப்பில் புலன் விசாரணையை மையப்படுத்திய திரைக்கதையாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "துப்பறிவாளன்" படத்தின் தொடர்ச்சியாக வெளியாகும் திரைப்படம்.
துப்பறிவாளன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தினை நடிகர் விஷால் இயக்குகிறார். நடிகர் விஷால் இயக்கத்தில் உருவாகும் இப்படம் பல எதிர்பார்ப்புகளில் திரில்லர் மற்றும் சுவாரஸ்ய திரைக்கதையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை இயக்குனர் மிஸ்க்கின் இயக்கியுள்ளார், பின்னர் சில தயாரிப்பு பிரச்சனைகள் காரணமாக இப்படக்குழுவில் இருந்து இயக்குனர் மிஸ்க்கின் வெளிவந்ததால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் விஷால் இயக்குகிறார். நடிகராகவும், தயாரிப்பாளராகும் இருந்த விஷால் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் வெள்ளித்திரையில் அவதரித்துள்ளார்.
துப்பறிவாளன் 2 திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் விஷால் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "விஷால் பிலிம் ஃபேக்ட்ரி" நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
துப்பறிவாளன் 2 படத்தின் பிரத்தியேக தகவல்கள்
2017ல் வெளியான துப்பறிவாளன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள துப்பறிவாளன் 2 படத்திலும் நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோர் அவர்களின் கணியன் பூங்குன்றன் மற்றும் மனோகர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இப்படமானது ஹாலிவுட் திரைப்பட துறையில் பிரபல புலன் விசாரணை படமாக உருவாகி உலகளவில் பிரபலமான "ஷெர்லாக் ஹோம்ஸ்" கதையின் பிறப்பிடமான லண்டனில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2019 நவம்பர் 4ல் லண்டனில் தொடங்கியுள்ளது. மிக தீவிரமாக நடைபெற்றிருந்த படத்தின் படப்பிடிப்பு 2019 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னரே 2019 டிசம்பர் 20ல் படப்பிடிப்பினை முடித்து இணையத்தில் அந்த தகவலினை வெளியிட்டுள்ளது.
துப்பறிவாளன் படத்தில் நாயகியாக நடித்திருந்த அணு இம்மானுவேல் (மல்லிகா) கதாபாத்திரம் அந்த படத்திலையே கொலை செய்யப்பட்ட காரணத்தால் இப்படத்தில் ஒரு புதிய நாயகிக்கான கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குனர் மிஸ்க்கின். இப்படத்தில் நடிகை அஷ்ய நாயகியாக நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.