டியூப்லைட் இயக்குனர் இந்திரா இயக்கத்தில், இந்திரா, அதிதி, பாண்டியராஜன், பிரவீன் நடிக்கும் நகைச்சுவைத் திரைப்படம்.
கதை :
ஹீரோ இந்திரா பணம் பறிப்பதற்காக பெண் வேடமிட்டு ஒரு இளைஞனை ஏமாற்றி பணம் பறித்துவிட்டு திரும்புகிறார். வழியில் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டு தன்னுடைய காது கேட்கும் திறனை இழக்கிறார். யாராவது பேசினால் கூட சில நேரம் கழித்து தான் கேட்டகின்ற நிலைமைக்கு தள்ளப்படுகிறார்.
இந்த குறைபாடால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகும் இந்திரா தனக்கு ஆர்ட் தெரபி வழங்கும் அதிதி மீது காதல் வருகின்றது. நிதியும் தன்னுடைய காதலை இந்திராவிடம் கூற வரும் நேரத்தில் அவரை ஏதோ ஒரு கும்பல் கடத்துகிறது.
அதிதியை கடத்தியது யார்..? எதற்காக கடத்தினார்கள்..? இந்திரா அதிதியை காப்பாற்றினாரா..? அவருடைய கேட்கும் திறன் குறைபாடு சரியானதா..? என்பதே மீதிக்கதை.