twitter

    விடுதலை கதை

    விடுதலை - தமிழ் சினிமா முக்கிய இயக்குனர்களில் ஒருவரான திரு. வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரி & தமிழ் திரைப்பட நடிகர் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜா இசையமைத்துள்ளார்.

    எழுத்தாளர் திரு. ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற நாவல் கதையினை அடிப்படையாக அமைத்து உருவாக்கப்பட்டுள்ள விடுதலை திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆர் ராமர் எடிட்டிங் செய்துள்ளார். விடுதலை திரைப்படத்தில் பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜிவ் மேனன், கவுதம் மேனன் என பல தமிழ் திரைப்பட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வெளியாகிறது. முதல் பாகமான விடுதலை (பார்ட் 01) திரைப்படம் 2023, மார்ச் 31ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. விடுதலை திரைப்படத்தினை 'ஆர் எஸ் இன்போடைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு '' சான்றிதழ் அளித்துள்ளது.




    விடுதலை திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) மக்களுக்காக ஒரு தனி படை அமைத்து அரசாங்கத்தை எதிர்த்து போராடும் போராளி. இவரை பிடிக்க 'ஆபரேஷன் கோஸ்ட் ஹன்ட்' என்ற பெயரில் ஒரு தனி படை அமைத்து விஜய் சேதுபதியை பிடிக்க அவரது கிராமத்தை முகாமிட்டுள்ளனர், காவலர்கள். காவலர்களில் ஒருவராக இருக்கும் சூரி தனது பணியில் சந்திக்கும் இன்னல்கள் & அவமானங்களை கடந்து எப்படி சாதிக்கிறார் என்பதே படத்தின் கதை.

    இப்படத்தின் கதை விஜய் சேதுபதி மற்றும் சூரியின் கதாபாத்திரத்தின் கோணத்தில் இருந்து வெவ்வேறு கதைக்களமாக அமைந்துள்ளது. விடுதலை படத்தின் கதையின் நாயகன் 'சூரி' திரைப்படத்தின் நாயகன் 'விஜய் சேதுபதி' ஆக இப்படம் உருவாகியுள்ளது.

    விடுதலை திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

    வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் 2023, மார்ச் 31ல் வெளியானதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 செப்டம்பர் மாதம் வெளியாகிறது. விடுதலை திரைப்படத்தில் கதையின் நாயகன் 'சூரி' மற்றும் திரைப்படத்தின் நாயகன் 'விஜய் சேதுபதி' என வெற்றிமாறன் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளார்.

    இப்படத்தின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த 3 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் 'உன்னோடு நடந்தா' பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

    நடிகர் சூரி நாயகனாக நடிக்க விடுதலை திரைப்படத்தினை ஒப்பந்தம் செய்துள்ளனர், படக்குழுவினர். பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு, கோவிட் போன்ற பல இன்னல்களுக்கு பிறகு இறுதியில் 2021 ஏப்ரல் மாதம் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, முதலில் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். பிறகு இந்த படப்பிடிப்பில் இருந்து உடல் நல குறைவு காரணமாக பாரதிராஜா விலக பிறகு பல நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தபட்டு இறுதியில் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்தனர், படக்குழுவினர்.

    விஜய் சேதுபதி இப்படத்தில் பணியாற்ற தொடங்கியதும் நாயகன் சூரியை ஓரங்கட்டிவிட்டு விஜய் சேதுபதியே நாயகன் ஆகியுள்ளார். இப்படத்தின் கதை அடிப்படையில் சூரியின் கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கிறது. ஆனால் விடுதலை படத்தின் திரைக்கதையில் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவமாக மாற்றியுள்ளனர், படக்குழுவினர்.

    விடுதலை திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ - க/பெ ரணசிங்கம்தங்கம் (பாவ கதைகள்) படத்திற்கு பிறகு நாயகியாக நடித்துள்ளார். இவர் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாரின் தங்கை ஆவார்.

    விடுதலை ரிலீஸ்

    விடுதலை திரைப்படத்தினை பல போராட்டங்களுக்கு பிறகு 2023 மார்ச் 31ல் வெளியிட்டுள்ளனர். இப்படத்தினை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. விடுதலை திரைப்படத்தின் ஆன்லைன் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை 'ஜீ 5' நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie விடுதலை with us? Please send it to us ([email protected]).