எண்ணித்துணிக இயக்குனர் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில், ஜெய், அதுல்யா ரவி, வம்சி கிருஷ்ணன் என பலர் இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
கிரைம் மற்றும் அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2022, ஜூலை 04 உலகமுழுவதும் வெளியாகியுள்ளது.