கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டினார் செல்வராகவன்.. மனசே இல்ல.. சீனியர் நடிகர் சொன்ன ஷாக் நியூஸ்
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் முக்கியமான இயக்குநராக மாறினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இயக்கதிலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்துகிறார். இப்போது அவர் ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து சீனியர் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
செல்வராகவன் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை பாதிக்கட்டத்தில் செல்வராகவன் கைகளுக்கு வந்தது. அதனையடுத்து தன்னுடைய பதின்ம வயதிலேயே எந்த வித பதற்றமுமின்றி அந்தப் படத்தை இயக்கி முடித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்துக்கு கைக்கொடுக்க ஓரளவு அடையாளப்பட்டது படம்.

காதல் கொண்டேன்: இரண்டாவது படமாக அவர் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம்தான் தனுஷுக்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும், செல்வராகவனுக்குள் மிகச்சிறந்த இயக்குநர் இருக்கிறார் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பித்தது. இன்றுவரை அந்தப் படம் பலரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
முன்னணி இயக்குநர்: இரண்டாவது படத்தின் வெற்றியை அடுத்து செல்வராகவன் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அவரது இயக்கத்துக்கென்று பலர் ரசிகர்களாக மாறினர். அதற்கேற்றபடிதான் அவரது படங்களும் அமைந்தன. 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் உலகம், மயக்கம் என்ன என செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான படங்கள் வெவ்வேறு ஜானரில் அட்டகாசமாக அமைந்திருந்தன.
இளையராஜாவை கடவுள் போல் பார்த்தார் ரஜினி.. ஆனால் அசிங்கப்பட்டுட்டார்.. பிரபலம் கிளப்பிய பகீர்
நடிப்பில் கவனம்: இடையில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்த செல்வராகவன்; தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமான திருமணம் அன்போடு சென்றுகொண்டிருக்கிறது. இயக்கத்திலிருந்து இப்போது ஒதுங்கியிருக்கும் அவர் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.
அப்படி அவர் பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களையும் அவர் இயக்கவிருக்கிறார். கடைசியாக தனுஷ் எழுதிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் செல்வராகவன் ஒரு இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பருத்திவீரன்.. அவ்ளோ அசிங்கப்படுத்தினாங்க.. சூர்யா ஃபேமிலி ஏன் என்றுகூட கேட்கவில்லை.. அமீர் உருக்கம்
பாவா லட்சுமணன் பேட்டி: இந்நிலையில் வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோருடன் நடித்திருக்கும் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் செல்வராகவன் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “புதுப்பேட்டை திரைப்படத்தில் நான் இரண்டு நாட்கள் நடித்தேன். ஆனால் எனக்கு நடிக்கவே தெரியவில்லை என செல்வராகவன் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி கெட்ட கெட்ட வார்த்தைகளில் அத்தனை பேர் முன்னாடி திட்டினார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இனியும் இதில் இருந்தால் சரியாக இருக்காது என்று நான் வெளியேறிவிட்டேன். செல்வராகவனின் உதவி இயக்குநராக இருப்பது கொடுமை. அவர் வருகிறார் என்றால் அனைவரும் ஓடிப்போய் ஒளிந்துகொள்வார்கள்” என்றார்.


Click it and Unblock the Notifications











