ரசிகர்களுடன் இணைந்து சரிபோதா சனிவாரம் படம் பார்த்த நானி.. அட கூட இவங்களும் இருக்காங்களே!

சென்னை: அடுத்தடுத்த வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை இணைத்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து டோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து வலம்வந்துக் கொண்டிருப்பவர் நடிகர் நானி. ஷ்யாம் சிங்கா ராய், அந்தே சுந்தரானிகி, தசரா, ஹாய் நானா என வித்தியாசமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து ஹிட் கொடுத்துள்ளார் நானி.

இன்றைய தினம் நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சரிபோதா சனிவாரம் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. அண்டே சுந்தரானிக்கு படத்தை தொடர்ந்து சரிபோதா சனிவாரம் படம் மூலம் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் இரண்டாவது முறையாக நானி இணைந்துள்ளார்.

nani priyanka mohan saripodhaa sanivaraam movie

சரிபோதா சனிவாரம் படம்: நடிகர் நானி அடுத்தடுத்த சுவாரஸ்யமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் இரண்டாவது முறையாக நானி இணைந்துள்ள சரிபோதா சனிவாரம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. முன்னதாக இந்தக் கூட்டணி அண்டே சுந்தரானிக்கு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தது. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் நானியுடன் நஸ்ரியா இணைந்திருந்தார். தமிழிலும் இந்தப் படம் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் நானியின் 31வது படமாக சரிபோதா சனிவாரம் படம் வெளியாகியுள்ளது.

சீரியல் இயக்குநர் மீது குற்றம் சாட்டிய நடிகை.. மலையாள சின்னத்திரைக்கும் பரவும் பாலியல் குற்றசாட்டு!


பாராட்டுகளை பெற்ற எஸ்ஜே சூர்யா நடிப்பு: இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ளார். பிரியங்கா மோகன் -நானி கூட்டணிக்கும் இது இரண்டாவது படம். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் வெளியான கேங் லீடர் படத்திலும் இந்த ஜோடி இணைந்திருந்தது. படத்தில் மிரட்டல் இணைப்பாக எஸ்ஜே சூர்யா வில்லனாக களமிறங்கியுள்ளார். இவர் நேரடியாக நடிக்கும் தெலுங்குப்படம் இது. ட்ரெயிலர் உள்ளிட்ட படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களில் இவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்குகளில் ரசிகர்களும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

அம்மா அமைப்பு தனக்கு உதவியாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை.. ஐஸ்வர்யா லெக்ஷ்மி பளீர்!


திரையரங்கில் FDFSவை பார்த்த நானி: இந்தப் படத்தை நானி மற்றும் எஸ்ஜே சூர்யாவிற்காக பார்க்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களுடன் இணைந்து நானி இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்த்துள்ளார். அவருடன் படத்தின் நாயகி பிரியங்கா மோகனும் உடனிருந்தார். முன்னதாக இந்த ஜோடிக்கு திரையரங்கில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருந்தனர். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியயில் வெளியாகியுள்ளது.


தமிழ் ரசிகர்களை கவருமா?: படம் பக்கா மாஸ் கமர்ஷியல் படம் என்றும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். பிரியங்கா மோகனின் க்யூட் நடிப்பும் இந்தப் படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தமிழிலும் சூர்யாவின் சாட்டர்டே என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்த வாரம் தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தப் படமும் ரிலீசாகாத நிலையில், நானியின் சூர்யாவின் சாட்டர்டே படம் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X