ஜன நாயகன் சுழலில் சிக்கித் தப்பித்ததா அன்பே டயனா?.. ஹிட்டா?.. ஃப்ளாப்பா?.. இதுவரை வசூல் எவ்வளவு?

சென்னை: ஜன நாயகன் திரைப்படம் வந்தால் தியேட்டர்கள் மொத்தமும் அந்த படத்துக்குச் சென்று விடும் என உஷாரான மாதவன் தனது ஜி.டி. நாயுடு பயோபிக் படத்தையே அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து விட்டார்.

ஆனால், ஒரு வாரம் நம்ம படம் ஓடினாலே லாபத்தை பார்த்து விடலாம் என ரொம்பவே நம்பிக்கையுடன் அதுவும் கிறிஸ்டோபர் நோலனின் ஒடிஸி படம் வெளியாகும் போது தில்லாக பாரி இளவழகன் தனது 'அன்பே டயானா' படத்தை ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்தார்.

Anbe Diana 10 Days Box Office Collections details are here

அன்பே டயானா வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், படத்தின் பட்ஜெட் அளவுக்காவது படம் வசூல் செய்ததா? இந்த படம் ஹிட்டா? ஃப்ளாப்பா? என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

Also Read
விஜய்யோட லீக்கான ஜனநாயகனே அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை காலி பண்ணிடுச்சு.. கருப்பு வசூலை முந்துமா?
விஜய்யோட லீக்கான ஜனநாயகனே அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை காலி பண்ணிடுச்சு.. கருப்பு வசூலை முந்துமா?

ஜாலியான படம்: கலப்புத் திருமணம் கதையை ரொம்பவே ஜாலியான படமாக இயக்கி நடித்திருந்தார் ஜமா படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா ரங்கநாதன் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்திருந்தார். நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் இணைந்தார். சேத்தன், பரிதாபங்கள் கோபி, செல் முருகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கு இந்து பையனுக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் மற்றும் திருமண சிக்கலை செம ஜாலியான டோனில் கொடுத்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது.

10வது நாள் வசூல்: கடந்த ஜூலை 17ம் தேதி வெளியான அன்பே டயானா படத்துக்கு முதல் நாளில் ஓபனிங் கிடைக்கவில்லை என்றாலும், சனி மற்றும் ஞாயிறு படம் பாக்ஸ் ஆபீஸில் பிக்கப் ஆனது. ஆனால், அடுத்த வாரம் வியாழக்கிழமையே ஜன நாயகன் எனும் சுனாமி வந்த நிலையில், அனைத்து தியேட்டர்களிலும் ஜன நாயகன் படம் திரையிடப்பட்டது. 2வது வாரத்திலேயே அன்பே டயானா படத்தின் வசூல் டல்லடிக்கத் தொடங்கிய நிலையில், மீண்டும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்துக்கு குடும்பத்துடன் ரசிகர்கள் வரத் தொடங்கினர். இந்நிலையில், 10 நாட்களில் இதுவரை அன்பே டயானா திரைப்படம் 3.69 கோடி ரூபாய் வசூலை இந்தியாவில் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் அதிகபட்சமாக 4 முதல் 5 கோடி வரை படம் ஈட்டியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Recommended For You
அன்பே டயானா திருடப்பட்ட கதையா?.. எழுத்தாளர் கூட்டிய பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது
அன்பே டயானா திருடப்பட்ட கதையா?.. எழுத்தாளர் கூட்டிய பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது

ஹிட்டா? ஃப்ளாப்பா?: 7 முதல் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அன்பே டயானா படத்தை பாரி இளவழகன் உருவாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அபிஷன் ஜீவிந்த் இயக்கி நடித்த வித் லவ் திரைப்படம் இந்த ஆண்டு 40 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றிப் பெற்றது. கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் திரைப்படம் 82 கோடி வரை வசூல் ஈட்டி ரெக்கார்ட் படைத்தது. பாரி இயக்கி நடித்த 'அன்பே டயானா' சுமார் 5 கோடி வரை வசூல் ஈட்டிய நிலையில், படத்தின் பட்ஜெட் அளவுக்காவது பாக்ஸ் ஆபீஸில் லாபம் வருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அன்பே டயானா எப்படியாவது பாக்ஸ் ஆபீஸில் வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என போராடி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X