ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனிருத்.. எமோஷனல் ஆகி பேசிட்டாரு பாருங்க

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை கடந்து இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள். சிலரோ எமோஷனல் ஆகி கதறி அழுகிறார்கள். இப்படி இரண்டு பெரிய உணர்சிகளை கொடுத்த படமாக அது அமைந்திருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தும் படம் பார்க்க சென்னை ரோகிணி தியேட்டருக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடமும் பேசினார்.

விஜய் தமிழ்நாட்டு ரசிகர்களின் உணர்வோடு கலந்தவர். அதன் காரணமாகத்தான் அவரை கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே மாநிலத்தின் முதலமைச்சராக்கியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தங்களை பல வருடங்கள் திரையில்ல் தோன்றி மகிழ்வித்தவர்; ஜனநாயகன் படத்தோடு ஒதுங்கியிருப்பதால் இப்படத்தை பார்க்க உச்சக்கட்ட ஆர்வத்தோடு இருந்தார்கள். அதனால்தான் இணையத்தில் லீக்கான பிறகு தியேட்டரில் ரிலீஸானாலும்; ஜனநாயகனுக்கு கூட்டம் அலைமோதுகிறது.

Anirudh Gets Emotional at Jana Nayagan Screening Vijay Is Always Double Special for Me
Photo Credit:

படம் சூப்பரா?: ஹைப் ரீதியாக படம் எக்கச்சக்க உயரத்தை எட்டிவிட்டது. ஆனால் மேக்கிங் ரீதியாகவும், ரசிகர்களை திருப்திப்படுத்தும் விஷயத்திலும் படம் பாஸானதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பார்க்கையில் படத்துக்கு இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்களே எழுந்துவருகின்றன. பகவந்த் கேசரியின் ரீமேக்காக இருந்தாலும்; அப்படியே ஈ அடித்தான் காப்பி போல் எடுத்து வைக்காமல்; புதிதாகவும் சில விஷயங்களை சேர்த்து கதை செய்திருக்கிறார் வினோத். அதுவும் ரசிகர்களுக்கு திருப்தியைத்தான் கொடுத்திருக்கிறது.

Also Read
விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்.. கதறி அழுத தவெக அமைச்சர்.. கலாய்த்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்
விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்.. கதறி அழுத தவெக அமைச்சர்.. கலாய்த்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்

படையெடுத்த பிரபலங்கள்: ஜனநாயகன் படத்தை சாமானிய ரசிகர்கள் எப்படி முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று கொண்டாடுகிறார்களோ; அதேபோல் செலிபிரிட்டிகளும் தியேட்டர்களுக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்தவகையில் சென்னை வெற்றி தியேட்டருக்கு ஜனநாயகன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வந்தார். அவருடன் தயாரிப்பாளர், அமைச்சர் கில்லி சரத் உள்ளிட்டோரும் வந்திருந்தார்கள். அனைவருடனும் அமர்ந்து படம் பார்த்த அவர்; ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

Recommended For You
Jana Nayagan: தளபதி கச்சேரியில் One Last Danceக்காகவே தியேட்டர் போலாம் பசங்களா.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Jana Nayagan: தளபதி கச்சேரியில் One Last Danceக்காகவே தியேட்டர் போலாம் பசங்களா.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அனிருத் சொன்னது: தியேட்டருக்குள் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜனநாயகன் திரைப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலாக இருக்கிறது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடுவதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. விஜய்யுடைய காம்பினேஷன் எப்போதுமே எனக்கு டபுள் ஸ்பெஷல்" என தெரிவித்தார். முன்னதாக, விஜய்யும், அனிருத்தும் ரொம்பவே நெருக்கமான நண்பர்கள் ஆவர். தளபதியில் குட் புக்கில் அனியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

ஹிட் காம்போ: விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட், ஜனநாயகன் ஆகிய நான்கு படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அந்தப் படங்களில் இடம்பெற்றிருந்த பாடல்களும், இசையும் பலத்த வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X