சிம்புவுக்கு சொல்லப்பட்ட கதையில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா?.. சீக்ரெட் சொன்ன இயக்குநர்
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்ப்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். இப்போது அவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தக் கதை சிம்புவுக்கு சொல்லப்பட்டதாக ஒரு தகவல் ஓடியது.
கோமாளி படத்தின் டீசண்ட்டான வரவேற்புக்கு பிறகு சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சேஷனல் லவ் டுடே: லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்காலத்திற்கேற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
ஓ போடு.. ஜெமினி இரண்டாம் பாகமா? சீயான் விக்ரம் கொடுத்த மாஸ் அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு: இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் தகவல் பரவியது. மேலும் படமானது ஹிந்தியில் ரீமேக்காகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.

நடிகர்: லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்ஹ்டில் LIC (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற படத்தில் நடித்துவருகிறார். அஜித்தை வைத்து இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறிய பின் இப்படத்தை இயக்குவதால் இதன் கதை மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க; எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் கமிட்டாகியிருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன.
அபிராமி எடுத்த அதிரடி முடிவு.. சொத்தை அடைய திட்டம் போடும் ரியா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
அடுத்த படம்: எல்ஐசி படத்துக்கு பிறகு ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார் பிரதீப் ஆண்டனி. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பு வீடியோ நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் அஸ்வத் - பிரதீப் இணைந்திருக்கும் படத்தின் கதை ஏற்கனவே சிம்புவுக்கு சொல்லப்பட்டதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது.
அஸ்வத் விளக்கம்: இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் அஸ்வத் மாரிமுத்து, “சிம்புவுக்கு நான் சொன்ன கதை வேறு. பிரதீப்புக்கு சொன்ன கதை வேறு. பிரதீப் ஆண்டனியை வைத்து இயக்கும் இந்தப் படத்தின் கதை சென்னையை பின்புலமாக கொண்டு நகரும். இந்தக் கதை முழுக்க முழுக்க பிரதிப் ஆண்டனியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதைதான்” என்றார்.


Click it and Unblock the Notifications











