Atlee - பாலிவுட்டில் கொடுத்த மாஸ் ஹிட்.. அடுத்து ஹாலிவுட் போகிறாரா அட்லீ?.. அவரே சொன்னதை பாருங்க

மும்பை: அட்லீ இயக்கிய திரைப்படம் ஜவான். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த வருடம் வெளியானது. தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் படத்துக்கு ஒழுங்கான வரவேற்பு இல்லை. இருந்தாலும் வட மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இந்தச் சூழலில் ஹாலிவுட் படம் இயக்கப்போவது குறித்து அட்லீ முக்கியமான விஷயத்தை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தமிழில் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். அவர் படங்களை காப்பி அடிக்கிறார் என்று ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தாலும் அவரது மேக்கிங்கும், சீன்களும் நன்றாகவே இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இந்தச் சூழலில் முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

Atlee Will direct Hollywood Movie Here are the full details


முழுக்க தமிழ் டீம்தான்: பொதுவாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட் செல்லும் இயக்குநர்கள் அங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்தே பணியாற்றுவார்கள். ஆனால் அட்லீயோ முழுக்க முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களை இங்கிருந்து அழைத்து சென்றார். அழைத்து சென்றது மட்டுமின்றி அவர்களிடமிருந்து சிறந்த வேலையை வாங்கியிருக்கிறார் என்றும் பலர் கூறினர். அனிருத்கூட இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி ஆகி அடுத்தடுத்து சில ஹிந்தி படங்களில் கமிட்டாகியிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நயனும் இன்னொரு ஹிந்தி படத்தில்ந் அடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

வசூல் மழை: ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என ஷாருக்கின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உலகம் முழுவதும் 1125 கோடி ரூபாயை ஜவான் படம் வசூலித்திருக்கிறத். இது வேறு எந்த இந்திய படமும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தின் வெற்றி காரணமாக உற்சாகமடைந்த ஷாருக் மிண்டும் அட்லியூடன் இணைந்து படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.

கலவையான விமர்சனம்: வசூல் ரீதியாக ஜவான் படம் சிக்சர் அடித்தாலும் விமர்சன ரீதியாக அவுட் ஆனது. அதிலும் தமிழ் ரசிகர்கள் ஜவான் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். எப்போதும் வேறு படங்களிலிருந்து அட்லீ காப்பி அடிப்பார் ஆனால் இதில் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார். முக்கியமாக 10க்கும் மேற்பட்ட படங்களின் மூவி மிக்சர்தான் ஜவான் என ஓபனாக கூறினார். இருந்தாலும் வட மாநிலங்களில் ஜவான் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது.

Actor Dhanush: தொடரும் ராயன் பட கொண்டாட்டம்.. இன்னைக்கு யாரோட போஸ்டர் தெரியுமா?


தாதா சாகேப் பால்கே விருது: முதல் படத்திலேயே பிரமாண்ட வெற்றியை பாலிவுட்டில் அட்லீ பதிய வைத்துவிட்டதால் அவருக்கான டிமாண்டும் அதிகரித்திருக்கிறது. மேலும் தாதா சாகேப் பால்கே விருதையும் அவர் சமீபத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அட்லீ ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கப்போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அதுகுறித்து அட்லீ விளக்கமளித்திருக்கிறார்.

Sudha Kongara: புறநானூறு படம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்திய சுதா கொங்கரா.. எப்படி உருவாகும்?


அட்லீ பேச்சு: விழா ஒன்றில் பேசிய அட்லீ, “நான் உதவி இயக்குநராக ஷங்கரிடம் பணியாற்றினேன். என்னுடைய முதல் நாள் ஷூட்டிங் ஞாபகம் இன்னும் இருக்கிறது. எந்திரன் படத்தின் செட்டுக்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். அவரைப் பார்த்து அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்துபோனேன். எனது வாழ்வில் எப்போது அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். மிகப்பெரிய இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ரஜினிகாந்த்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய், ஷாருக்கானை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். எனது வாழ்வில் அற்புதுங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றேன். பாலிவுட்டை அடைய எனக்கு 8 வருடங்கள் தேவைப்பட்டன. அடுத்த மூன்று வருடங்களில் ஹாலிவுட்டிலிருந்து பெரிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X