Avengers: Doomsday: அயர்ன் மேன் திரும்ப வந்துட்டாரு.. டிசம்பரில் முரட்டு சம்பவம்.. டாம்ஸ் டே டிரைலர் ரிலீஸ்

சென்னை: மார்வெல் ரசிகர்கள் பல மாதங்களாக ஆவலுடன் காத்திருந்த 'Avengers: Doomsday' திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதுவரை வெளியான மார்வெல் படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான சூப்பர் ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்திருப்பது மட்டுமல்லாமல், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய சர்ப்ரைஸையும் படக்குழு வைத்துள்ளது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் உச்சகட்ட வெற்றிப் படங்களான Avengers: Infinity War மற்றும் Avengers: Endgame வெளியான பிறகு, அந்த அளவிலான வரவேற்பை எந்த படமும் பெறவில்லை என்ற விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. புதிய கதாபாத்திரங்கள், புதிய கதைக்களங்கள் என மார்வெல் பல முயற்சிகளை எடுத்தாலும், 'எண்ட்கேம்' ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் உருவாக்க முடியவில்லை. அந்த குறையை ஒரே படத்தில் சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் Avengers: Doomsday உருவாகி வருவதாக டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read
Hi Release Date: சூர்யாவோடு மோத முருகனை கூப்பிட்ட கவின்.. அரிவாளோடு ஹாய் சொல்லும் நயன்.. சம்பவம் உறுதி
Hi Release Date: சூர்யாவோடு மோத முருகனை கூப்பிட்ட கவின்.. அரிவாளோடு ஹாய் சொல்லும் நயன்.. சம்பவம் உறுதி

இந்த முறை வெறும் அவெஞ்சர்ஸ் மட்டும் இல்லை. Fantastic Four குழுவினரும் முழு வீச்சில் கதைக்குள் இருக்கின்றனர். இதனால் மார்வெலின் அடுத்த கட்ட கதைக்களம் இன்னும் பெரிய அளவில் விரிவடையப் போகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.

Avengers Doomsday Trailer Unites Avengers X-Men amp amp Fantastic Four RDJ Stuns as Doctor Doom
Photo Credit:

அதேபோல் ஆண்ட்-மேன், நியூ கேப்டன் அமெரிக்கா சாம் வில்சன், வின்டர் சோல்ஜர், தோர், லோகி, ஷாங்-சி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களும் மீண்டும் களமிறங்குகின்றனர். அதோடு வகாண்டா நாட்டின் புதிய பிளாக் பான்தர் மற்றும் அவரது டீம் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சமீபத்தில் அறிமுகமான Thunderbolts-இல் இடம்பெற்ற யெலெனா, ஜான் வாக்கர், ரெட் கார்டியன், கோஸ்ட் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் இந்த இந்த படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வில்லன் தான் விஷயமே: எவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், டிரெய்லரின் கடைசி சில நொடிகளில் தோன்றும் டாக்டர் டூம் காட்சிதான் ரசிகர்களை அதிகம் பேச வைத்துள்ளது. டோனி ஸ்டார்க் கதாபாத்திரம் Endgame படத்தில் முடிவுக்கு வந்த பிறகு, ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் மார்வெலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த முறை அவர் ஹீரோவாக அல்ல, உலகையே அச்சுறுத்தும் வில்லனாக இந்த படத்தில் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

நடிகர்கள்: இந்த திரைப்படத்தில் கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரட், ஆண்டனி மேக்கி, புளோரன்ஸ் பக், வனேசா கிர்பி, செபாஸ்டியன் ஸ்டான், டாம் ஹிடில்ஸ்டன், சிமு லியு, லெட்டிடியா ரைட், ஜோசப் குவின், இயன் மெக்கெல்லன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஜேம்ஸ் மார்ஸ்டன், சானிங் டாட்டம், டேவிட் ஹார்பர் உள்ளிட்ட ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மார்வெல் வரலாற்றிலேயே அதிக நட்சத்திரங்கள் இணைந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Recommended For You
The Odyssey Review: என்னது.. லீலா பேலஸ் தயிர் சாதமா? நோலன் படத்தை பொட்டலம் கட்டிய பிரசாந்த் ரங்கசாமி
The Odyssey Review: என்னது.. லீலா பேலஸ் தயிர் சாதமா? நோலன் படத்தை பொட்டலம் கட்டிய பிரசாந்த் ரங்கசாமி
Avengers Doomsday Trailer Unites Avengers X-Men amp amp Fantastic Four RDJ Stuns as Doctor Doom
Photo Credit:

ரிலீஸ் தேதி: வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள Avengers: Doomsday, Endgame படத்தின் சாதனைகளை முறியடிக்குமா? அல்லது மார்வெலுக்கு மீண்டும் பழைய மகுடத்தை சூட்டுமா? என்பதுதான் தற்போது உலகம் முழுவதும் உள்ள சூப்பர் ஹீரோ ரசிகர்களின் அதாவது அவஞ்சர்ஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X