தீனாவுக்கு 3 திருமணங்கள்.. காலையில் ஒரு பெண், இரவில் ஒரு பெண்.. பயில்வான் ரங்கநாதன் போட்ட குண்டு
சென்னை: தமிழ் திரையுலகில் தீனா சொல்லிக்கொள்ளும்படியான இசையமைப்பாளராக வலம் வந்தவர். பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்த அவர் ஒருகட்டத்தில் வாய்ப்பு எதுவும் இல்லாமல் ஒதுங்கினார். இந்த சூழலில் அவர் தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கங்கை அமரன் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தீனா குறித்து பரபரப்பான விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் இசையமைப்பாளர் தீனா. இவர் பாஜக கட்சியிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தீனா தலைமையில் நான்கு ஆண்டுகள் இந்த சங்கம் செயல்பட்டு வந்தது. சூழல் இப்படி இருக்க அடுத்த தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இந்தத் தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக தீனா சொல்லியிருக்கிறார். இது சங்கத்தில் இருக்கும் மற்றவர்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது.

கொந்தளித்த கங்கை அமரன்: முக்கியமாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கொந்தளித்து தீர்த்துவிட்டார். சில நாட்களுக்கு முன்புகூட செய்தியாளர்களை சந்தித்த அவர், “இது இளையராஜா அமர்ந்திருக்க வேண்டிய இடம். எங்களது வீட்டில் நடந்த துக்க நிகழ்வு குறித்து உங்களுக்கு தெரியும் . அதனால்தான் அண்ணனால் வர முடியவில்லை. அவருக்கு பதில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவி என்பதுதான் விதி.
மோசடி செய்த தீனா: கொரோனா காலகட்டத்தில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு பணம் கொடுத்ததாக கையெழுத்து போட்டு சில ஆவணங்களை சமர்ப்பித்திருக்கின்றனர். அந்த ஆவணங்களை இவர்களாகவே தயார் செய்திருக்கிறார்கள். பவதாரிணியின் கையெழுத்தை அவருக்கே தெரியாமல் போடவும் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் 80 லட்சம் ரூபாய்வரை சுருட்டியிருக்கிறார்கள். பதவி போய்விட்டால் சிக்கிவிடுவோமே என்கிற பயத்தில்தான் தீனா மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என யாரையும் மதிக்கமாட்டார். இளையராஜாவை வாடா போடா என்று சொன்னவர். ரஹ்மானின் அப்பா ஃபோட்டோவை தூக்கி வெளியில் எல்லாம் போட்டிருக்கிறார்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அய்யோ இது பிரதீப் ரங்கநாதன் இல்லை!.. அந்த பிக் பாஸ் பிரபலம்.. தீயாக பரவும் குழந்தைப்பருவ புகைப்படம்!
பயில்வான் ரங்கநாதன் அதிரடி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “சிலருக்கு நாற்காலி மீது வெறி இருக்கும். அந்த வெறி எப்போதுமே அவர்களுக்கு போகாது. அப்படிப்பட்டவர்தான் தீனா. இவர் சமீபத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டார். தமிழ்நாடு திரை இசை கலைஞர்கள் சங்க கட்டடம் கட்டுவதற்கு பணம் கொடுப்பதாக இளையராஜா கூறினார். ஆனால் தீனாவின் நடவடிகைகள் சரியில்லாததால் அந்தப் பணத்தை இளையராஜா தரவில்லை.
Goundamani: கவுண்டமணி மகள் திருமணம்.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!
ஜனநாயக விரோதி: தீனா ஒரு ஜனநாயக விரோதி. தீனாவை கங்கை அமரன் காறி துப்பிவிட்டார். இதனை கேட்ட பிறகு தனக்கு பதவியே வேண்டாம் என்று தீனா போயிருக்க வேண்டும். தீனா கண்டிப்பாக புழல் சிறைக்கு போவார். அவரது சொந்த வாழ்க்கை சாக்கடையை விட மோசம். ஆரம்பத்தில் இவர் இசையமைக்கும்போது இவரிடம் வீணை வாசிக்க வந்த பெண்ணை தன் வசம் செய்துவிட்டார். இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தார்கள். ஆனால் அவர்களை சரியாக கவனிக்கவில்லை என்று தீனாவிடமிருந்து விலகிவிட்டார் அந்தப் பெண்.
அதோடு நிற்கவில்லை: அதோடு தீனா நிற்கவில்லை. அதற்கு பிறகு பாடல் பாட வாய்ப்பு கேட்டு வந்த ஒரு பெண்ணையும், ஒரு இஸ்லாமிய பெண்ணையும் மடக்கிப்போட்டுவிட்டார். பகலில் ஒரு பெண், இரவில் ஒரு பெண் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார் தீனா. வேறு வழியில்லாமல் அவருடன் அந்த இரண்டு பெண்களும் வாழ்ந்துவருகிறார்கள். தீனா சரியான பொம்பளை பொறுக்கி" என்றார்.


Click it and Unblock the Notifications











