பிளடி பெக்கர் படத்துக்கு கவின் ஹீரோவா.. வேணாம்னு சொன்னேன்.. அப்ப நெல்சன் திலீப்குமார் சாய்ஸ் யாரு?

சென்னை: நடிகர் கவின் லீட் கேரக்டரில் நடித்துள்ள பிளடி பெக்கர் படம் வரும் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக அவரது லிஃப்ட், டாடா, ஸ்டார் படங்கள் சிறப்பான கவனத்தை அவருக்கு பெற்றுக் கொடுத்த நிலையில் பிளடி பெக்கர் படமும் அவரது கேரியரில் பெஸ்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னதாக படத்தின் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியான நிலையில் அதில் பிச்சைக்காரராக கவினின் பாடி லாங்குவேஜ் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இதற்கான பாராட்டுகளை அவர் தற்போதே பெற்று வருகிறார். இதனிடையில் நேற்றைய தினம் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதில் கவின், நெல்சன் திலீப் குமார், இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்துள்ளனர்.

kavin bloddy beggar movie nelson dilipkumar


பிளடி பெக்கர் படம்: நடிகர் கவின் லீட் கேரக்டரில் நடித்து பிளடி பெக்கர் படம் உருவாகி உள்ளது. சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். படம் வரும் தீபாவளியையொட்டி அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடந்து முடிந்துள்ளது. இதில் படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் திலீப்குமார், நடிகர் கவின், இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்று படத்தின் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டனர்.

Bloddy Beggar: ஓகேவா பண்ணிடுவியா கேள்வி கேட்ட நெல்சன்.. கவின் ரியாக்ஷன்.. பிளடி பெக்கர் உருவான கதை!


கவினை வேண்டாமென்ற நெல்சன்: இந்த படத்தில் கவினை ஹீரோவாக்க வேண்டும் என்பதில் இயக்குனர் சிவபாலன் உறுதியாக இருந்த நிலையில், இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், கவின் இந்த படத்தின் ஹீரோவாக வேண்டாம் என்றும் அவருக்கு பதில் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட யாரையாவது படத்தின் ஹீரோவாக்கலாம் என்றும் இயக்குனரிடம் முன்னதாக கூறியுள்ளார். கவினுக்கு நண்பனாக மற்ற உதவிகள் ஏதாவது செய்து கொள்ளுங்கள், நானும் செய்கிறேன் என்பதாக நெல்சன் திலீப் குமார் கூறிய நிலையில் அதற்கு தலையாட்டிய இயக்குனர் சிவபாலன், தொடர்ந்து இரு தினங்கள் கழித்து வந்து கவின்தான் தனக்கு ஹீரோவாக வேண்டும் என்று கூறியதாக நெல்சன் நேற்றைய தன்னுடைய பேச்சில் கூறியுள்ளார்.

Bloddy Beggar movie: ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன் இருந்தானாம்.. வெளியானது பிளடி பெக்கர் பட ட்ரெயிலர்!


உறுதியாக இருந்த இயக்குநர்: அப்போது கவினின் டாடா படம்கூட வெளியாகாத நிலையில், இன்றைக்கு இருக்கும் மார்க்கெட்டில் கவினுக்கு இந்த கேரக்டர் எதுவும் மேட்ச் ஆகாது என்றும் நெல்சன் கூறியுள்ளார். ஆயினும் டைரக்டர் உறுதியாக இருந்த நிலையில், கவினுக்கு பிச்சைக்காரராக லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் இதையடுத்தே தனக்கு கான்ஃபிடன்ஸ் வந்ததாகவும் நெல்சன் திலீப் குமார் மேலும் கூறியுள்ளார். நேற்றைய தினம் நிகழ்ச்சியில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கவினும் இதே கருத்தையே பேசியுள்ளார். தன்னிடம் துவக்கத்தில் நெல்சன் திலிப் குமார் எதையும் பேசவில்லை என்றும் பண்ணிடுவியாடா என்று கேட்டதாகவும் தான் பண்ணிடுவேன் என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
பிச்சைக்காரனாக கவின்: இந்நிலையில் தன்னுடைய வித்தியாசமான நடை, உடை, பாவனைகளால் படத்தின் கேரக்டரை சிறப்பாக்கியுள்ளார் கவின். தங்களுக்கு எல்லாம் ஸ்மார்ட்டாக அழகாக தெரிந்த கவினின் மற்றொரு பக்கம் இயக்குனர் சிவபாலனுக்கு அவர் பிச்சைக்காரனாக தெரிந்துள்ளார் என்று முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெல்சன் கவினை கலாய்த்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நேற்றைய தினம் வெளியாகியுள்ள படத்தின் ட்ரெயிலரும் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படமும் கவினின் கேரியர் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X