ஜனநாயகன் படத்துக்காக 2 முறை அழுத ஹெச்.வினோத்.. விஜய் கொடுத்த தைரியம் இதுதான்.. என்ன தெரியுமா?
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் பல பிரச்னைகளை நாளை மறுதினம் ரிலீஸாகவிருக்கிறது. இதனால் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் இயக்குநர் ஹெச்.வினோத் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசியபோது,'ஜனநாயகன் படத்துக்காக இரண்டு முறை அழுததாக' தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த விவரத்தை இதில் பார்க்கலாம்.
அரசியலுக்கு வந்திருப்பதால் ஜனநாயகன் படத்தோடு சினிமாவிலிருந்து விலகுகிறர் விஜய். இதுதான் கடைசி படம் என்பதால் இதனை பெரிய திருவிழா போல் கொண்டாடுவதற்கு தயாராக இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்த திரைப்படம் தள்ளிப்போனது. அதனையடுத்து நீதிமன்றத்துக்கும் சென்று பார்த்துவிட்டது படக்குழு. ஆனால் அங்கேயும் எதுவும் சாதகமாக நடக்கவில்லை என்பதால் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மறுதணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது படம்.

லீக்கான படம்: அப்போதும் அதிகாரிகள் பார்க்காமல் இழுத்தடித்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் கிடப்பில் கிடந்த முழு படமும் திடீரென சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் லீக்காகிவிட்டது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த படுபாதக செயலை செய்ததாக கூறி ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். சென்சார் அதிகாரிகள் மட்டும் ஒழுங்காக படத்தை பார்த்திருந்தால்; இந்நேரம் லீக்காகாமல் தியேட்டரிலேயே ரிலீஸாகியிருக்கும் என கொந்தளித்தார்கள் ரசிகர்கள்.
படத்துக்கு ஏ சான்றிதழ்: பிறகு நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஏ சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். விஜய்யின் படங்களுக்கு குழந்தைகளுக்கு மத்தியில் எப்போதுமே மவுசு அதிகம். ஆனால் இப்படம் ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது படக்குழுவுக்கு கொஞ்சம் அப்செட்தான். இருப்பினும் சான்றிதழ் கிடைத்ததே பெரிது என்பதால்; இந்த சர்ட்டிஃபிக்கேட்டை வாங்கிக்கொண்டு அமைதியாக வந்துவிட்டார்கள். ரசிகர்களும் நிம்மதியடைந்த மகிழ்ச்சியோடு காணப்படுகிறார்கள்.
நாளை மறுநாள் ரிலீஸ்: சான்றிதழ் கிடைத்துவிட்டதால் படத்தின் ரிலீஸ் வேலைகளும் பரபரத்திருக்கின்றன. அந்தவகையில் நாளை மறுநாள் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது படம். படத்தில் சில விஷயங்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும்; லீக்கான ப்ரிண்டில் இருந்த விஷயங்கள் பல இதில் இருக்காது என்றும் கருதப்படுகிறது. மேலும் படத்தின் டைட்டில் கார்டில், 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்' என்றும் போடவிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
வினோத் பேட்டி: ரிலீஸையொட்டி இயக்குநர் வினோத் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். அந்தவகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஜனநாயகன் படத்துக்காக நான் மொத்தம் இரண்டு முறை அழுதேன். சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை உருவானபோதும், படம் இணையத்தில் லீக்கானது. அப்போது அதை அதிகம் பேர் ஷேர் செய்துகொண்டே இருந்தபோதும் அழுதேன். அந்த நேரத்தில் தளபதி விஜய்தான் என் பின்னால் நின்றார். இப்படித்தான் நடக்கும். வருத்தப்படாதீர்கள், மனம் கஷ்டமாக இருந்தால் ஃபோன் செய்யுங்கள் என கூறினார்" என்றார். அவரது இந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. கண்டிப்பாக ஜனநாயகன் வெற்றி பெற்று வினோத் சந்தித்த மன உளைச்சலை எல்லாம் தீர்த்து வைக்கும் என்றும் ரசிகர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications

