Vidaamuyarchi - விடாமுயற்சி படத்துக்கு வந்திருக்கும் புதிய சிக்கல் இதுவா?.. அய்யோ இன்னும் என்ன நடக்கப்போகுதோ?

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச். வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. கண்டிப்பாக இந்தப் படமும் துணிவு படமும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஏகே ரசிகர்கள்.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

Here is the New details about Vidaamuyarchi Movie Shooting

விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துவருகிறது. அஜித்தும் மும்முரமாக அதில் கலந்துகொண்டு நடித்துவிட்டு தற்போது குட்டி பிரேக் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பிரேக்கில் அவர் தனது குடும்பத்தினருடன் முழுமையாக நேரத்தை செலவிட்டுவருகிறார். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் அர்ஜுன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். சமீபத்தில்கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின.

Rajini - விஜய் ரசிகர்களால் ரஜினிகாந்த் மன உளைச்சலுக்கு ஆளானார்.. அந்தணன் சொன்ன ஷாக் நியூஸ்


அடுத்தக்கட்ட ஷூட்டிங்: முதலில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக அஜர்பைஜானில் ஷூட்டிங்கை நடத்தியது படக்குழு. அதில் அஜித்தும் முழுமூச்சுடன் கலந்துகொண்டார். மும்முரமாக நடந்த ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய படக்குழு ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்றது. கதையில் முக்கால்வாசி போர்ஷனை அஜர்பைஜானில் நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எழுந்த சிக்கல்: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்குக்கு புதிய சிக்கல் எழுந்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அஜர்பைஜானில் மோசமான வானிலை நிலவிவருவதால் ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இனியும் அஜர்பைஜானில் முகாமிட்டிருந்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்துவிடும் என்று நினைத்த படக்குழு சென்னைக்கு திரும்பிவிட்டதாகவும் மீதம் உள்ள காட்சிகளை செட் போட்டு எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி சங்கி தான்.. லால் சலாம் படம் ஓடணும்.. அதுக்குத்தான் இந்த பேச்சு.. உண்மையை உடைத்த பிரபலம்!


எப்போது ரிலீஸ்: மேலும் விடாமுயற்சி படத்தில் இன்னும் க்ளைமேக்ஸ் காட்சியை மட்டும்தான் எடுக்க வேண்டியிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அதுமட்டுமின்றி படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதற்கான அத்தனை பணிகளிலும் மகிழ் திருமேனி மும்முரமாக இறங்கியிருக்கிறார் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்தும் தகவல் கசிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X