Ayalaan - பிரின்ஸில் விட்டதை அயலானில் பிடிச்சிட்டாரே.. சிவகார்த்திகேயன் காட்டில் தொடர்ச்சியான மழை
சென்னை: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. ஏலியனை வைத்து முதன்முறையாக படம் வெளியாகியிருப்பதால் சிறுவர், சிறுமிகள் மற்றும் குடும்பத்தினரிடம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பிரின்ஸ் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு பலத்த அடியை கொடுத்தது. இதனையடுத்து அவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் அவரும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்தபடியே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சிவகார்த்திகேயன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ஏலியன் ஜானர்: ஏலியன் பூமிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஏலியன் ஜானரில் படம் உருவானதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தாமதமானது. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகள் மிச்சம் இருந்ததால் ரிலீஸ் தாமதமானது என்று கூறப்பட்டாலும்; பண பிரச்னைதான் படத்தின் ரிலீஸுக்கு தாமதம் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.
அயலான் ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க அயலான் திரைப்படம் வெளியாகுமா இல்லையா என்பது குறித்து சந்தேகம் எழுந்தது. ரசிகர்களுக்கு நல்ல செய்தி தரும் விதமாக படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டு அதன்படி கடந்த 12ஆம் தேதி ரிலீஸும் ஆனது. அயலானுக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ், அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்கள் வெளியாகின. எனவே இந்தப் பொங்கல் போட்டி கடுமையாக இருந்தது.
Maya: செடி வாடினா.. நான் தண்ணீ ஊத்துறேன்.. அர்ச்சனாவுக்காக மாயா வெளியிட்ட பதிவு!
பாசிட்டிவ் விமர்சனம்: படக்குழு எதிர்பார்த்தபடியே அயலானுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்தது. கதையை பொறுத்தவரை சாதாரண லைன் என்றாலும் திரைக்கதையிலும், கிராஃபிக்ஸ் பணிகளிலும் படக்குழு மெர்சல் செய்துவிட்டதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறினர். மேலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அயலான் திரைப்படம் இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்நிலையில் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி உலகம் முழுவதும் படமானது 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான மாவீரன் திரைப்படமும் 50 கோடி ரூபாயை தாண்டியது. தற்போது அயலானும் அந்த வசூலை தாண்டியிருப்பதால் தொடர்ச்சியாக எஸ்கேவுக்கு இரண்டு சூப்பர் ஹிட்டுகள் கிடைத்துவிட்டன என்று எஸ்கே ரசிகர்கள் கூறுகின்றார்கள்.
Mission Chapter 1: பாண்டிச்சேரியில் தியேட்டரில் படம் பார்த்த அருண் விஜய்.. அட இவ்வளவு ரெஸ்பான்சா!
முக்கியமாக பிரின்ஸ் படம் படுதோல்வியடைந்ததை அடுத்து சிவகார்த்திகேயனின் கரியர் காலி என்றே பலரும் பேசினார்கள். ஆனால் மாவீரன் ஆடியோ லான்ச்சில் பேசிய சிவகார்த்திகேயன், பிரின்ஸில் விட்டதை இதில் பிடித்துவிடுவேன் என்று கூறியிருந்தார். சொன்னதுபோலவே மாவீரன் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அயலானும் 50 கோடி ரூபாயை தாண்டியிருப்பதால் தொடர்ச்சியாக 50 கோடி ரூபாய் கிளப்பில் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கிறார். எனவே அடுத்தடுத்த படங்களிலும் அவரது சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த படம்: சிவகார்த்திகேயன் தற்போது தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். அதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல் ஹாசன் தயாரித்துவருகிறார். நிச்சயமாக இந்தப் படமும் ஹிட் அடித்து சிவாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்கின்றனர் அவரது ரசிகர்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











