Shivaratri - ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி.. அருள் வந்து நடனமாடியவர் விஜய் சேதுபதியா?.. Vibe ஆன பூஜா ஹெக்டே
கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் நேற்று சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் பூஜா ஹெக்டே, தமன்னா, சந்தானம், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டதாகவும்; அவர் சங்கர் மகாதேவன் பாடியபோது அருள் வந்தது போல் நடனமாடியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர். அதேபோல் பூஜா ஹெக்டேவும் சங்கர் மகாதேவன் பாடியபோது உச்சக்கட்ட வைப் ஆனார்.
சிவராத்திரி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவனின் பக்தர்கள் இரவு முழுக்க விழித்திருந்து சிவனை வழிபாடு செய்வார்கள். அந்தவகையில் கோவையில் இருக்கும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்திலும் வருடா வருடம் சிவராத்திரி விழா களைகட்டும். இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள். ஏன் பிரதமர் நரேந்திர மோடியேகூட ஒரு முறை கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விவிஐபிக்கள் கலந்துகொள்வதால் சிவராத்திரி விழாவில் ஈஷா யோகா மையத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும்.

சர்ச்சை: இந்த நிகழ்ச்சிக்கு ஒருதரப்பினரிடம் ஆதரவு இருந்தாலும் பெரும்பாலானோர் எதிர்க்கவே செய்கிறார்கள். ஏனெனில் அந்த யோகா மையம் கட்டப்பட்டபோதே பல ஹெக்டேர் அளவிலான காடுகள் அழிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதேபோல் சிவராத்திரி விழா அன்று நடத்தப்படும் நிகழ்ச்சியாலும், வரும் சத்தத்தாலும் வன விலங்குகளுக்கு கடுமையான தொந்தரவு ஏற்படும் என்றும் வன ஆர்வலர்கள் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
Indian 2 - நிதி நெருக்கடியில் இருக்கும் லைகா?.. வைத்து செய்யும் ஷங்கர்?.. இந்தியன் 2வில் இப்படி ஒரு மேட்டரா?
தொடர்ந்து நடக்கிறது: ஆனாலும் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத ஜக்கி வாசுதேவ், வருடா வருடம் சிவராத்திரி விழாவை நடத்திவருகிறார். நீண்ட மேடையில் அவர் நடனமாடுவது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாவது வழக்கம். ஜக்கி வாசுதேவ் நடனம் ஆடும்போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் முதல் சாமானியர்கள்வரை பரவசத்தில் ஆடுவார்கள். அண்மையில்கூட சமந்தா உள்ளிட்ட நடிகைகள் ஜக்கி வாசுதேவுடன் சில வருடங்களுக்கு முன்பு நடனம் ஆடியது ட்ரெண்டானது.
Nayanthara: வயதானாலும் மெருகேறும் நயன்தாரா.. மகளிர் தினத்தில் இப்படி வாழ்த்திய விக்னேஷ் சிவன்!
இந்த வருட சிவராத்திரி விழா: இந்நிலையில் இந்த வருடமும் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, நடிகர் சந்தானம், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விஜய் சேதுபதியும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. விழாவில் சங்கர் மகாதேவன் சில பாடல்களை பாடினார். அப்போது நடிகை பூஜா ஹெக்டே பக்தி பரவசத்தில் உச்சக்கட்ட வைப் ஆனார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் சங்கர் மகாதேவன் பாடியபோது அருள் வந்தது போல் நடனமாடியதாக சமூக வலைதளங்களில் தீயாக தகவல் பரவியது. ஆனால் அவர் விஜய் சேதுபதி இல்லை அவர் போல் உருவம் இருக்கும் இன்னொருவர் என்று இப்போது தெரியவந்திருக்கிறது.
நாடோடி பாடல்கள்: இதற்கிடையே சங்கர் மகாதேவன் பாடிய பாடல்களும் ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அதாவது அவர் பாடிய பாடல்களில் ஒன்று நாடோடிகள் திரைப்படத்தில் இடம்பெற்ற சம்போ சிவ சம்போ பாடல். அந்தப் பாடலை திரைப்படத்தில் பாடியதும் சங்கர் மகாதேவனே. ஆனால் சிவராத்திரியில் சிவன் பாடலை பாடாமல் நாடோடி பாடலை எதற்காக பாட வேண்டும். அதற்கு இவர்கள் ஏன் வைப் ஆக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸை பார்க்க முடிகிறது. முன்னதாக சிவராத்திரி விழாவில் கலந்துகொண்ட சந்தானம், கண்கள் மூடி வேண்டியபோது பக்தி பரவசத்தில் தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுதது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications