யார் சொன்னது சண்டைனு.. தாய்க்கு கோயில் கட்டிய விஜய்?.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவருகிறது. அங்கு எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.
விந்தியா விவாகரத்து செய்தது யாரை தெரியுமா?.. காசுக்காக இப்படி பேசலாமா.. பயில்வான் ரங்கநாதன் கேள்வி!
விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
கேரளா சென்ற விஜய்: அதனையடுத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. அதன்படி படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடந்தது. அங்கு விஜய்க்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. விஜய்க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ஒட்டுமொத்த கேரள திரையுலகமும், தமிழ் திரையுலகமும் மிரண்டுதான் போயின. அங்கு ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக தற்போது படக்குழு ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறது. இதுதான் கடைசி ஷெட்யூல் ஷூட்டிங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோலக்ஸ் கேரக்டரை அப்படியே காப்பியடிச்சது மாதிரியே இருக்கே.. பகத் ஃபாசிலிடம் கேட்ட மலையாள ரசிகர்!
தாய்க்கு கோயில்: இதற்கிடையே விஜய் அவரது தந்தையுடன் பேசுவதில்லை என்றும்; தாயுடன் முன்னர் போல் நெருங்கி பழகுவதில்லை என்றும் ஒரு தகவல் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு சாய் பாபா கோயில் ஒன்றில் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றாரோ என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் அதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதாவது அந்தப் புகைப்படம் எடுத்தது ஷீரடி சாய்பாபா கோயில் இல்லையாம். சென்னை கொரட்டூரில் தனக்கு சொந்தமான இடத்தில் தன்னுடைய தாய் ஷோபாவுக்காக விஜய் கட்டிக்கொடுத்த சாய்பாபா கோயில் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட தன் அம்மாவுக்காக தளபதி கோயில் எல்லாம் கட்டியிருக்கிறாரா என்று நெகிழ்ந்துவருகின்றனர். விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அடுத்ததாக தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாக்கும் பணியில் இறங்கப்போகிறார்.


Click it and Unblock the Notifications











