விஜய்யின் ஜனநாயகன் படத்தை இப்போவே பார்க்கணும்.. கதறி அழும் 3 வயது சிறுவன்.. அய்யோ பாவம்

சென்னை: விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நாளை மறுதினம் வெளியாகவிருக்கிறது. பல இன்னல்களை தாண்டி வருவதால் இந்தப் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சென்சார் அதிகாரிகள் ஏ சான்றிதழ் கொடுத்திருப்பதால்; 18 வயதுக்குட்பட்டவர்கள் பார்ப்பதில் சிக்கலும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் மூன்று வயது சிறுவன் அழுத அடம்பிடிக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஜனநாயகன் ஜனவரி மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் அப்போது ரிலீஸாகவில்லை. அதனையடுத்து நீதிமன்றம், படம் லீக், மறு தணிக்கை என பல தடுமாற்றங்களை சந்தித்தது படக்குழு. ஒருவழியாக கடந்த வாரத்தில் படத்துக்கு ஏ சான்றிதழை கொடுத்து இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் சென்சார் அதிகாரிகள். இதனால் படம் 23ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.

Jana Nayagan A Certificate Leaves 3-Year-Old Vijay Fan in Tears Viral Video Melts Hearts
Photo Credit:

பரபர பணிகளில் வினோத்: இதன் காரணமாக ரசிகர்களும், படக்குழுவினரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இயக்குநர் ஹெச்.வினோத் ப்ரோமோஷன் பணிகளிலும் பரபரப்பாக ஈடுபட்டிருக்கிறார். இன்றுகூட செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர், "ஜனநாயகன் படத்துக்கு வந்த அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் ஆலமரமாக விஜய்யும், தயாரிப்பாளரும் இருந்தார்கள். படத்துக்கு முதலில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. பிறகு சான்றிதழ் தராமல் நிறுத்தினார்கள். அதற்கு பிறகு மொத்த படமும் லீக்கானது.

Also Read
விஜய் சார் முதலமைச்சர் ஆக மாட்டாருன்னு ஏன் நினைச்சேன்.. எனக்கு நடந்த அநீதி.. எச். வினோத் ஓபன் டாக்!
விஜய் சார் முதலமைச்சர் ஆக மாட்டாருன்னு ஏன் நினைச்சேன்.. எனக்கு நடந்த அநீதி.. எச். வினோத் ஓபன் டாக்!

இப்போது ஏ சான்றிதழ்: கடைசியாக ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். அனைத்து பிரச்னைகளிலும் முழு ஆதரவை விஜய் கொடுத்தார். இந்த சான்றிதழுக்கு எதிராக போராட்டம் நடத்த எங்களுக்கு நேரம் இல்லை. ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் குழந்தைகள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க முடியாது என்பது வருத்தம்தான். படம் ஏற்கனவே லீக்காகிவிட்டாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது பாராட்டுக்குரியது.

Recommended For You
வீடியோ காலுக்கு 6000? சொந்தமாக ஆப் தொடங்கிய தர்ஷா குப்தா.. ரேட் கார்டை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!
வீடியோ காலுக்கு 6000? சொந்தமாக ஆப் தொடங்கிய தர்ஷா குப்தா.. ரேட் கார்டை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

விஜய் மீது இருக்கும் மரியாதை: விஜய் மீது இருக்கும் மரியாதையாலும், நம்பிக்கையாலும், நேர்மையாலும் தியேட்டருக்கு வரும் மக்களுக்கு என்னுடைய பெரிய சல்யூட்" என்றிருந்தார். இதற்கிடையே படத்டுக்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் நம்மால் படம் பார்க்க தியேட்டருக்கு செல்ல முடியாதே என்ற சோகத்தில் சிறுவர்களும், சிறுமிகளும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, விஜய்யின் படங்கள் பெரும்பாலும் ஏ சான்றிதழே பெற்றதில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, மூன்று வயது சிறுவன் ஒருவன் தன் தாயிடம் விஜய்யின் ஜனநாயகன் படம் பார்க்க வேண்டும் என கூற; அந்த தாயோ, 18 வயதானால்தான் தியேட்டருக்குள் விடுவார்கள். உன்னை வேறு படத்துக்கு கூட்டிக்கொண்டு செல்கிறோம். விஜய் படத்துக்கு நானும், அப்பாவும் மட்டும் போகிறோம் என கூறுகிறார். அதை கேட்டு மேற்கொண்டு அழும் சிறுவன், 'இப்போவே ஜனநாயகன் படத்துக்கு போயாக வேண்டும்' என அழுதபடி கூறுகிறார். இந்த விடீயோவை பார்த்த பலரும், விஜய் மீது குட்டீஸுக்கு இவ்வளவு பாசமா னெறு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X