விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஹெச்.வினோத் செய்த அட்வைஸ்.. ஜனநாயகன் இயக்குநரின் ஆசை நிறைவேறுமா

சென்னை: விஜய்க்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் சமீபத்தில்தான் கல்லூரி படிப்பை வெளிநாட்டில் முடித்தார். மகன் ஜேசன் சஞ்சய்யும் கனடாவில் படித்துவிட்டு இப்போது சிக்மா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஜூலை 31ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யிடம் ஜனநாயகன் இயக்குநர் ஹெச்.வினோத் ஒரு அட்வைஸ் செய்திருக்கிறார்.

விஜய்யும், சங்கீதாவும் விவாகரத்து மனநிலையில் இப்போது இருக்கிறார்கள். அவர்களின் மகள் லண்டனில் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் வாங்கினார். அதேபோல் ஜேசனும் சில வருடங்களுக்கு முன்பு சினிமா தொடர்பான படிப்பை படித்துவிட்டு தன் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் வழியில் இயக்குநராகும் முயறியில் ஈடுபட்டார். அப்படி சங்கீதா தரப்பின் முயற்சியால் லைகா நிறுவனத்தில் படம் இயக்குவதற்கான வாய்ப்பு வந்தது. ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்க கமிட்டானார். தமன் இசையமைத்திருக்கிறார்.

Jana Nayagan Director H Vinoth Urges Jason Sanjay to Turn Hero Please Become an Actor Too
Photo Credit:

படம் பற்றிய விவரங்கள்: பண கொள்ளையை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை அவர் அமைத்திருப்பார் என தெரிகிறது. அவருடன் பணியாற்றியது இனிமையான அனுபவம் என்றும்; முதல் பட இயக்குநர் மாதிரியே தெரியவில்லை என்றும் ஸ்பாட்டில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். படத்திலிருந்து வந்த அப்டேட்டுகளும் அதையே உணர்த்தின. அதிலும், படத்தின் பாடல் ஒன்றில் ஜேசனும் தோன்றி நடனமாடியது; அப்படியே வின்டேஜ் விஜய்யை பார்ப்பது மாதிரி இருந்ததாக கொண்டாடினார்கள் ரசிகர்கள். அதுமட்டுமின்றி அவர் ஹீரோவாகவே நடிக்கலாமே ஏன் இன்னமும் தாமதிக்கிறார்; விஜய் விட்டு செல்லும் விஷயத்தை பாரம்பரியமாக ஜேசனும் தொடர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.

Also Read
ஜனநாயகன் படம் பார்க்கப்போகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்?.. எங்கே பார்க்கிறார் தெரியுமா?
ஜனநாயகன் படம் பார்க்கப்போகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்?.. எங்கே பார்க்கிறார் தெரியுமா?

படத்தின் ரிலீஸ்: படமானது ஜூலை 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் இன்று ஜனநாயகன் ரிலீஸ். எனவே கண்டிப்பாக இன்னும் ஒரு வாரம் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்தான். அதன் காரணமாக 31ஆம் தேதி ரிலீஸிலிருந்து சிக்மாவை தள்ளி வைக்க படக்குழு முடிவெடுக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகிறது. அப்படி அதே தேதியில் ரிலீஸானாலும் ஜனநாயகன் நன்றாக இல்லாதபட்சத்தில்தான் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன; ஒருவேளை படம் க்ளிக்காகிவிட்டால் சிக்மா பாடு திண்டாட்டம்தான்.

Recommended For You
Jana Nayagan - விஜய்யின் ஜனநாயகன்.. டைட்டில் கார்டிலேயே சட்டப்பேரவையில் செய்த ஆக்‌ஷன்.. செம சம்பவம்
Jana Nayagan - விஜய்யின் ஜனநாயகன்.. டைட்டில் கார்டிலேயே சட்டப்பேரவையில் செய்த ஆக்‌ஷன்.. செம சம்பவம்

ஹீரோவாக அறிமுகமாவாரா?: என்னதான் சிக்மா படத்தை ஜேசன் இயக்கியிருந்தாலும்; அவர் தன் தந்தை வழியில் ஹீரோவாக வேண்டுமென்பதுதான் பலரது விருப்பம். ஏற்கனவே அல்ஃபோன்ஸ் புத்திரன் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார். ஆனால் ஜேசன் டீசன்ட்டாக மறுத்துவிட்டார். அவர் தன்னை அணுகியபோது தான் தேடலில் இருந்ததாகவும், கதையை கேட்டுவிட்டு நோ சொல்லியிருந்தால் அது நன்றாக இருந்திருக்காது என்றும் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

வினோத் செய்த அட்வைஸ்: இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜேசன் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "இயக்குநர் ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் தொடக்க விழாவில் ஜேசன் சஞ்சய்யை சந்தித்தேன். அப்போது அவரிடம், 'தயவுசெய்து ஹீரோவாக நடியுங்கள். இங்கே இயக்குவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் நடித்துக்கொண்டே இயக்கவும் செய்யலாம்' என கூறினேன். ஜனநாயகன் ஷூட்டிங்கில் விஜய்யிடம் நான் ஜேசன் குறித்து பேசியதில்லை" என்றார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X