Jana Nayagan Cheyyaru Balu Review - ஜனநாயகன் செய்யாறு பாலு விமர்சனம்.. இப்படி கொண்டாடிருக்காரே ப்பா!

சென்னை: விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்கள்; ஒன் லாஸ்ட் டான்ஸை எமொஷனலாக பார்த்து ரசித்தார்கள். அதையெல்லாம் கடந்து பார்த்தால் படம் கொஞ்சம் சுமார்தான். ஆனால் செய்யாறு பாலுவோ இந்தப் படத்தை தன் விமர்சனத்தில் கொண்டாடியிருக்கிறார்.

அவர் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " ஜனநாயகன் ஆறு மாதங்களுக்கு பிறகு வந்திருக்கிறது. தியேட்டர்களில் திருவிழா மாதிரி இருக்கிறது. இணையத்தில் ஒன்றரை கோடி பேருக்கு மேல் பார்த்துவிட்டார்கள்; தியேட்டருக்கு யாரும் வரமாட்டார்கள் என சொன்னார்கள். ஆனால் தியேட்டரில் திருவிழாதான். பைரஸியில் விஜய் ரசிகர்கள் பெரும்பாலானோர் பார்க்கவில்லை. தியேட்டரில் செம வைபில் இருக்கிறார்கள். திட்டமிட்டே இந்தப் படத்தை சுத்தலில் விட்டிருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும்போதுதான் தெரிகிறது.

Jana Nayagan Review Cheyyaru Balu Calls Vijay s Film Crucial for His Political Journey
Photo Credit:

அப்போது மட்டும் வந்திருந்தால்: இந்தப் படம் மட்டும் திட்டமிட்டபடி அப்போதே வந்திருந்தால் கண்டிப்பாக 200 சீட்டுக்களை வென்றிருப்பார். இதை நான் சொல்லவில்லை என் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். படத்தின் பல இடங்களில் அரங்கே கை தட்டுகிறது. பாபி தியோல் தீவிரவாதியாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படம் முழுக்க தளபதி தளபதி என சொல்கிறார்கள்.

Also Read
ஜனநாயகன் ஒருவழியா ரிலீஸ் ஆகிடுச்சு.. காட்டுக்குள் கதை விவாதம் நடத்திய வினோத்.. இயக்குநர் சொன்ன சீக்ரெட்
ஜனநாயகன் ஒருவழியா ரிலீஸ் ஆகிடுச்சு.. காட்டுக்குள் கதை விவாதம் நடத்திய வினோத்.. இயக்குநர் சொன்ன சீக்ரெட்

விஜய் என்ற ஒற்றை மனிதர்: படத்தை விஜய் என்ற ஒற்றை மனிதர்தான் தாங்கியிருக்கிறார். இதையெல்லாம் மீறி அவ்வளவு அரசியல் வசனங்கள், மக்கள் பிரச்னைகள் இருக்கின்றன. படத்தின் பெரிய பலமே பெண்களுக்கான சென்ட்டிமென்ட்தான். தேர்தலுக்கு முன்னர் வந்திருந்தால் பெண்களின் வாக்குகள் இன்னும் விஜய்க்கு விழுந்திருக்கும். விஜய்யின் கடைசி படம் என்பதால் பல பெண்கள் தேம்பி தேம்பி அழுகிறார்கள். யார் சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை.

Recommended For You
நான் ஹீராவை காதலிக்கத்தானே செய்தேன்.. ஏன் மறைக்கணும்?.. அஜித்குமார் அதிரடி.. இப்படி சொல்லிருக்காரே?
நான் ஹீராவை காதலிக்கத்தானே செய்தேன்.. ஏன் மறைக்கணும்?.. அஜித்குமார் அதிரடி.. இப்படி சொல்லிருக்காரே?

செதுக்கியிருக்கிறார்கள்: விஜய்யின் கடைசி படம் என்பதாலும், அரசியலின் எதிர்காலத்துக்காகவும் வினோத் செதுக்கி செதுக்கி செய்திருக்கிறார். குடும்ப அரசியல் பற்றிய வசனத்துக்கு எல்லாம் தியேட்டரே ஓ என்று கத்துகிறது. அந்த 30 பேரை தளபதி என்ன செய்தார் என்ற சீன் ஓபன் ஆகும் பாருங்கள்; அதுதான் மாஸ் ஹீரோவுக்கான விஷயம். இடைவேளை காட்சி எல்லாம் அவ்வளவு சூப்பராக இருக்கிறது.

மமிதா பைஜூ கேரக்டர்: அடுத்ததாக மமிதா பைஜூ கேரக்டர் அனைவரையும் ரசிக்க வைத்தது. அவரது கேரக்டர் விஜய்க்கு இணையாக எழுதப்பட்டிருக்கிறது. அவரே விஜய்யின் தீவிர ரசிகை. திரை முழுவதும் விஜய்யை அப்பாவாக ஏற்றுக்கொண்ட காட்சிகள் எல்லாம் உருக வைக்கின்றன. பல இடங்களில் எமோஷனலாக இருக்கிறது. இதற்கு ஏ கொடுத்ததற்கு ரத்தத்துக்காகத்தான். கெட்ட வசனங்கள் எல்லாம் எதுவும் இல்லை.

வசனங்கள் பலம்: வசனங்களும், இசையும் பலமாக இருக்கின்றன. தளபதி கச்சேரிக்கு எல்லாம் ஒன்ஸ்மோர் கேட்கிறார்கள். விஜய் படத்துக்கு எப்படி ரீ ரெக்கார்டிங் செய்ய வேண்டும் என தெரிந்து வைப்பவர் அனிருத் மட்டும்தான். ஒளிப்பதிவும் சூப்பராக இருக்கு. பாபி தியோலும் தன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ஆகமொத்தம், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பெண்களும் பார்க்க வேண்டிய படம். சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு கமர்ஷியல் படம் இப்படித்தான் இருக்கும். விஜய்யின் அரசியலுக்கு மிக முக்கியமான படம் இது" என்றிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X