Ajith - திமுகவுடன் மோத தயாரான அஜித்?.. அவருக்கு வெற்றிமாறன் சொன்ன கதை இதுவே.. பத்திரிகையாளர் சொன்ன சீக்ரெட்

சென்னை: Ajith (அஜித்) அஜித்துக்கு வெற்றிமாறன் சொல்லியிருக்கும் கதை இதுதான் என பத்திரிகையாளர் சுபைர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

Jouranlist Subair Talks about Ajith - Vetrimaaran Movie Story

திரிஷா, ரெஜினா, பிரியா பவானி சங்கர், சஞ்சய் தத், அர்ஜுன், ஆர்வ் உள்ளிட்டோர் அஜித்துடன் இந்தப் படத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்த அடுத்த அப்டேட் எதுவும் படக்குழு சார்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் ஆரம்பித்தது. முதல் ஷெட்யூலை முடித்து சென்னை திரும்பிய அஜித் அடுத்த ஷெட்யூலுக்காக மீண்டும் அஜர்பைஜானுக்கு சில நாட்களுக்கு முன்புதான் கிளம்பி சென்றார்.

ஒளிப்பதிவாளர் மாற்றம்?: அதேபோல் முதலில் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக கமிட் செய்யப்பட்டார். அவர் அஜர்பைஜானில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இப்போது சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலக்கப்பட்டு ஓம் பிரகாஷை ஒளிப்பதிவாளராக கமிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித் நடித்திருந்த ஆரம்பம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Jyothika - ஹீரோயின்களின் நிலை இதுதான்.. ரசிகர்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள்.. ஜோதிகா வேதனை


அடுத்த படங்கள்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. அதன்படி 63ஆவது படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் 64ஆவது படத்தில் வெற்றிமாறன் இயக்கத்திலும் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. வெற்றி - அஜித் இணையும் படத்தை எல்ரெட் குமார் தயாரிப்பார் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

Rajinikanth - பாபா தோல்வியை ரஜினி கையாண்ட விதம் சூப்பர்.. ட்ரெண்டாகும் அக்‌ஷய் குமாரின் பேச்சு

சுபைர் பேட்டி: வெற்றிமாறனும் அஜித்தும் இணையவிருப்பதாக வந்திருக்கும் தகவலால் ஏகே ரசிகர்கள் படு உற்சாகமடைந்திருக்கின்றனர். மேலும் என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி வந்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர் சுபைர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “விடாமுயற்சி படத்தை முடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார்.

கதை இதுதான்: அந்தப் படத்தை முடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். அஜித்திடம் வெற்றிமாறன் கதை சொல்லி கன்ஃபார்ம் செய்துவிட்டார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். சவுக்கு சங்கரின் வாழ்க்கை வரலாறை வெற்றிமாறன் படமாக எடுக்கிறார். அதற்கான ஸ்க்ரிப்ட்டையும் எழுதி முடித்துவிட்டார். அந்தக் கதையைத்தான் அஜித்திடம் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.

அந்தக் கதையில் அஜித் நடித்தால் கண்டிப்பாக அவரது சினிமா கரியரில் இது வித்தியாசமான படமாக இருக்கும்” என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், சவுக்கு சங்கர் திமுகவுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருப்பவர். ஒருவேளை சுபைர் சொல்வது போல் நடந்தால் அஜித் திமுகவுடன் மோதுவதற்கு தயாராகிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுவதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X