Dhanush - குடும்பத்துக்கு நேர்ந்த அவமானம்?.. ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிய இதுதான் காரணமா?.. சீக்ரெட் சொன்ன பிரபலம்

சென்னை: Dhanush (தனுஷ்) ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார்.

Journalist Cheyyaru Balu Talks about Dhanush Aishwarya Rajinikanth Problem

தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார் தனுஷ்.

கேப்டன் மில்லர்: அவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். படமானது பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருண் இதற்கு முன்னர் இயக்கிய ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய இரண்டு படங்களுமே கவனம் ஈர்த்தவை என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

Rajinikanth - ரஜினி கையில் சிகரெட், சரக்கு பாட்டில்.. டென்ஷனான எம்ஜிஆர்.. என்ன நடந்தது தெரியுமா?

இயக்குநர் தனுஷ்: தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். ராஜ்கிரண் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய பவர்பாண்டி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தனது 50ஆவது படத்தையும் அவரே இயக்குகிறார். அதுதொடர்பான வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பிரிந்த தனுஷ்: இதற்கிடையே தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு பின் பிரிவில் நின்றது. இருவரும் பிரிந்தாலும் இதுவரை இரண்டு பேரும் விவாகரத்து பெறவில்லை. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக கூறப்படுகிறது.

LIC: பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி... பூஜையுடன் தொடங்கிய LIC ஷூட்டிங்!

செய்யாறு பாலு வீடியோ: இந்நிலையில் இருவர் பிரிவு குறித்தும் தனுஷ் குடும்பம் குறித்தும் செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், “தனுஷின் பெற்றோர் ரஜினியின் வீட்டுக்கு சென்றபோது ஒருவகையில் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அது நடந்திருக்கலாம். அது தனுஷுக்கு தெரியவந்தது. தனுஷ் தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர்.

கோபப்படுவார்கள்: ஒரு இடத்தில் தனது தாயோ, தந்தையோ கண்ணியமாக நடத்தப்படாவிட்டால் கோபம் வரும். இந்த விஷயம் தனுஷ் ஐஸ்வர்யாவுக்குள் பிரச்னையை ஏற்படுத்தியது. மேலும் தனது தாய், தந்தையையா அவமானப்படுத்துகிறீர்கள் என்ற ஆவேசத்தில்தான் போயஸ் கார்டனில் ஒரு மாளிகையையே தனுஷ் கட்டியிருக்கிறார்” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X